News May 26, 2024
ஒருநாளைக்கு எவ்வளவு சக்கரை பயன்படுத்தலாம்?

சுவையூட்டியான சர்க்கரை நம்முடைய அன்றாட டயட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றாகும். டீ, ஜூஸ், இனிப்புகள் என எந்தவொரு உணவிலும் சுவையை அதிகப்படுத்த நாம் சர்க்கரையை பயன்படுத்தி வருகிறோம். இது நம் மனதிற்கு இதமான உணர்வை கொடுத்தாலும், இதை அளவாக உண்ணாவிட்டால் உடலுக்கு பலவிதங்களில் கேடு விளைவிக்கும். குறிப்பாக, தினமும் 20 முதல் 25 கிராம் அளவிற்கு சர்க்கரை சாப்பிடுவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
Similar News
News March 5, 2026
தமிழக அரசியலில் இதுவே முதல்முறை

2026 தேர்தலுக்கு திமுக 21 கட்சிகளுடன் பிரமாண்டமான கூட்டணியை அமைத்துள்ளது. TN அரசியல் வரலாற்றிலேயே ஒரே கூட்டணி, சிந்தாமல் சிதறாமல் மேலும் புதிய கட்சிகளை சேர்த்து 4-வது முறையாக தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறை. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள்கூட(பிரேமலதா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக், கருணாஸ், தனியரசு உள்ளிட்டோர்) திமுகவுடன் இணைந்துள்ளன.
News March 5, 2026
மக்களுடன் தான் தவெக கூட்டணியா?

காங்., உடன் கைகோர்க்கலாம் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தவெகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். பண்ருட்டி ராமச்சந்திரன், முஸ்தபா ஆகியோர் விஜய்க்கு ஆதரவளித்தாலும், பெரிய கட்சியான காங்., வரும் என்ற நம்பிக்கை சிதைந்துவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ‘மக்களுடனே கூட்டணி’ என்ற நிலைப்பாட்டை விஜய் விரைவில் அறிவிப்பார் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
News March 5, 2026
மொத்தமாக ₹8,500 சம்பள உயர்வு.. இன்ப அதிர்ச்சி

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்துறை ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்து வருகிறார். இதன்படி, <<19299732>>டாஸ்மாக்<<>> ஊழியர்களுக்கு மேலும் ₹1,000 சம்பளம் உயர்வு, பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக <<19242295>>₹2,500<<>> சம்பளம் உயர்வு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு ₹5,000 உயர்த்தி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளால் அந்தந்த ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.


