News December 5, 2024

‘புஷ்பா 2’ BGM-ல் சாம் சிஎஸ் போட்டது எவ்வளவு?

image

‘புஷ்பா 2’ படத்தில் வரும் பின்னணி இசையில் 90% தன்னுடையது என சாம் சிஎஸ் தெரிவித்துள்ளார். ஸ்க்ரிப்ட்டை படிக்காமல் முழு படத்திற்கும் இசையமைத்த முதல் படம் இதுதான் எனவும், ரிலீஸ் தேதி நெருங்கியதால் எடிட்டிங் முடிந்ததும் விரைவாக இசையமைக்கச் சொல்லி தயாரிப்புத் தரப்பு தன்னை அணுகியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு சில சீன்களில் DSP-யின் இசை பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 9, 2025

Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்..

image

காலை 11:30 மணிக்கு கேட்கப்பட்ட <<17349992>>கேள்விகளுக்கான <<>>பதில்கள்: கேள்விகளுக்கு இங்கே கிளிக் பண்ணவும்.
1. சிக்கிம்
2. 2.5- 4.0 வரை (Acid pH)
3. 1955
4. அழ. வள்ளியப்பா
5. ‘ரவுண்டே கார்டன் காட்சி’- Roundhay Garden Scene! 1888 பிரெஞ்சு படம்(2.1 விநாடிகள்) நீங்க எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?

News August 9, 2025

4 ஆண்டுகளில் 17.74 லட்சம் பேருக்கு இலவச பட்டா: CM

image

சென்னை, தாம்பரத்தில் 20,021 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை CM ஸ்டாலின் வழங்கினார். பின்னர் விழா மேடையில் பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 17,74,561 குடும்பத்தின் வீட்டுமனை பட்டா கனவு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை நோக்கி TN வளர்ந்து வருவதாகவும் கூறினார். மேலும், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் ‘திராவிட மாடல் 2.0’ அரசு தொடரும் என்றும் சூளுரைத்தார்.

News August 9, 2025

ராமதாஸுக்காக காத்திருக்கும் நாற்காலி

image

மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு தொடங்கியுள்ளது. பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தும் ராமதாஸ் வரவில்லை. ஆனால், பொதுக்குழு மேடையில் ராமதாஸுக்காக தனியாக ஒரு நாற்காலி போடப்பட்டுள்ளது. பாமக வரலாற்றில் ராமதாஸ் இன்றி நடக்கும் முதல் பொதுக்குழு இதுவாகும். இதில், அன்புமணியே தலைவர், கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கே முழு அதிகாரம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

error: Content is protected !!