News November 24, 2024
IPLஇல் எந்த அணியிடம் எவ்வளவு தொகை உள்ளது?

ஐபிஎல் ஏலம் 2025 இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதில், எந்த அணி எவ்வளவு பர்ஸ் பேலன்ஸ் வைத்திருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம். CSK – ₹55 கோடி, SRH – ₹45 கோடி, MI – ₹45 கோடி, LSG – ₹69 கோடி, GT – ₹69 கோடி, RR – ₹41 கோடி, KKR – ₹63 கோடி, DC – ₹76 கோடி, RCB – ₹ 83 கோடி, PBKS – ₹110 கோடி மீதம் வைத்திருக்கின்றன.
Similar News
News December 28, 2025
கிருஷ்ணகிரியில் புதிய ரயில் வழித்தடம்

திருப்பத்தூர் முதல் ஓசூர் வரை கந்திலி, பர்கூர், கிருஷ்ணகிரி, சூளகிரி வழியாக புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் திருப்பத்தூர் ரயில் நிலையம் இனி ‘ஜங்ஷன்’ ஆக உருவெடுக்கும். இந்தத் திட்டத்தால் பர்கூர் மற்றும் ஓசூர் தொழில்பேட்டை பகுதிகளுக்கு நேரடி ரயில் வசதி கிடைப்பதோடு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கான பயண நேரமும் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 28, 2025
FLASH: டிச.31-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வரும் 31-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூடுகிறது. ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக EPS அறிவித்துள்ளார். ஏற்கெனவே SIR, பொதுக்குழு தீர்மானம், கூட்டணி விவகாரங்கள் என இம்மாதத்தில் மட்டும் 3 முறை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.
News December 28, 2025
நிலவின் இந்த ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா?

நிலவு என்றால் அதன் பிரகாசமே நினைவுக்கு வரும். ஆனால், நிலவு காடுகளை விட மங்கலானது. சூரிய ஒளியை பிரதிபலிக்கும் ஒரு மிரர் மட்டுமே நிலவு! 450 கோடி ஆண்டுகளுக்கு முன் ‘தியா’ என்ற கோள் பூமி மீது மோதியதில் சிதறிய துண்டுகள் சேர்ந்தே நிலவாக மாறியுள்ளது. இதன் ஒரு பக்கம் தடிமனாகவும், ஒரு பக்கம் மெலிந்தும் இருக்கும். நிலவில் காணப்படும் மரியா என்ற கரும்புள்ளிகள், எரிமலை குழம்புகள் குளிர்ந்து உருவான தழும்புகள்!


