News August 25, 2024
பங்குச்சந்தை முதலீடுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?

கோடீஸ்வரர்கள் மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும் என சிலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால், பங்குச்சந்தை அனைவருக்குமானது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் ₹1 கூட பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும். பங்குச்சந்தை மூலம் பணக்காரன் ஆக ஆர்வமும், நீண்ட கால முதலீடும் போதுமானது என நிபுணர்கள் சொல்கிறார்கள். யாருக்கெல்லாம் பங்குச்சந்தை கற்க ஆசை கமெண்ட் பண்ணுங்க. <<-se>>#sharemarket<<>>
Similar News
News July 5, 2025
APRO பணிகளில் திமுக ஐடி விங் ஊழியர்கள்? இபிஎஸ் தாக்கு

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (APRO) பணியிடங்களில் திமுக ஐடி விங் ஊழியர்களை நியமிப்பதாக தகவல் வெளியாவதாக குறிப்பிட்டுள்ள இபிஎஸ், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு இளங்கலை படிப்புடன், பத்திரிகை & மக்கள் தொடர்பு (அ) மீடியா சயின்ஸ் கட்டாயமாக்கப்பட்ட அரசாணையையும் திமுக அரசு திரும்பப் பெற முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலுக்காக இவர்களை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
148 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்..

IND vs ENG மேட்சில், டெஸ்ட் கிரிக்கெட்டின் 148 ஆண்டுகால வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்ந்துள்ளது. ENG-ன் பிரைடன் கார்ஸின் சிராஜ் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறியது தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் 10,000-வது டக் அவுட்டாகும். 1877-ல் ENG-க்கு எதிராக ஆஸி.யின் நெட் கிரிகோரி தான் முதன்முதலில் டக் அவுட்டாகி இருந்தார். 148 வருடங்கள், 3 மாதங்கள் & 20 நாள்கள் கழித்து 10,000-வது டக் அவுட் நிகழ்ந்துள்ளது.
News July 5, 2025
விசிக – காங்., இடையே வெடித்தது சண்டை..!

ராமதாஸை சந்தித்த செல்வப்பெருந்தகை, 2011-ம் ஆண்டை போல் விசிகவும் பாமகவும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு விசிகவின் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காங்., வலிமையாகவா இருக்கிறது என வினவிய அவர், விசிகவிற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனால், திமுக கூட்டணிக்குள் சண்டை வெடித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.