News August 5, 2025

தனி நபர் எவ்வளவு நகைக் கடன் வாங்கலாம்?

image

தங்கம், வெள்ளி நகைக் கடன் வாங்குபவர்களுக்கு ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயித்துள்ளது. அதன்படி, ஒருவர் 1 கிலோ வரை தங்க நகைகள், 50 கிராம் வரை தங்க நாணயங்களை அடமானம் வைக்கலாம். இதேபோல், 10 கிலோ வரை வெள்ளி நகைகள், அரை கிலோ வரை வெள்ளி நாணயங்களை அடகு வைக்க முடியும். கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். மேலும், தங்கத்திற்கு அதன் மதிப்பில் 85% வரை கடன் வாங்க முடியும். SHARE IT.

Similar News

News August 6, 2025

ராசி பலன்கள் (06.08.2025)

image

➤ மேஷம் – பெருமை ➤ ரிஷபம் – இன்பம் ➤ மிதுனம் – உற்சாகம் ➤ கடகம் – நலம் ➤ சிம்மம் – அமைதி ➤ கன்னி – புகழ் ➤ துலாம் – பாசம் ➤ விருச்சிகம் – சுபம் ➤ தனுசு – போட்டி ➤ மகரம் – சாந்தம் ➤ கும்பம் – சிக்கல் ➤ மீனம் – அன்பு.

News August 6, 2025

நெல்லையில் அடுத்த பயங்கரம்: 16 வயது சிறுவனுக்கு வெட்டு

image

கவின் ஆணவப்படுகொலை சம்பவத்தின் அதிர்ச்சியே ஒயாத நிலையில், சேரன்மகாதேவியில் வீடு புகுந்து பள்ளி மாணவனை 5 சிறார்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவியுடன் மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவன் பழகியதால் மாணவியின் உறவினர்களான 5 சிறார்கள் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மாணவன் சிகிச்சையில் உள்ள நிலையில், 5 சிறார்களும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

News August 5, 2025

BREAKING: போர்நிறுத்தத்தை மீறியது பாகிஸ்தான்

image

ஆபரேஷன் சிந்தூருக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறியுள்ளது. ஜம்மு & காஷ்மீரின் பூஞ்ச் பகுதி அருகே பாக்., ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்த நமது ராணுவம் சரியான பதிலடி தந்தது. இந்த சண்டை 15 நிமிடம் நீடித்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏதும் இல்லையென கூறப்படுகிறது. மேலதிக தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!