News March 7, 2025

சினிமாவில் வார்னரின் சம்பளம் எவ்வளவு?

image

கிரிக்கெட் வீரர் வார்னர் ‘ராபின் ஹூட்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் நடிக்க அவர் சம்பளம் எதுவும் கேட்கவில்லையாம். ஆனால், தயாரிப்பாளர் தான் அவருக்கு ₹50 லட்சம் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கி குடுமலா இயக்கியுள்ள இப்படத்தில் நிதின், ஸ்ரீலீலா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி இசையமைத்துள்ளார்.

Similar News

News March 9, 2025

‘சாம்பியன்’ ஆகப்போவது யார்?

image

தொடர் வெற்றிகளை குவித்து வரும் IND அணி, இன்று CT இறுதிப் போட்டியில் நியூசி.,யை எதிர்கொள்கிறது. டாஸ் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும். அனைத்து வீரர்களும் ஃபார்மில் இருப்பதும், ஒரே மைதானத்தில் விளையாடுவதும் INDக்கு சாதகமான காரணிகள். ICC போட்டிகளில் நியூசி., முன்னிலையில் இருப்பது கவலை அளிக்கிறது. இதனிடையே, ரோஹித் வெற்றிப் பயணத்தை தொடர வேண்டும், இன்று கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.

News March 9, 2025

ராஜாதி ராஜன் இந்த ராஜா!

image

இசைஞானி இளையராஜா லண்டனில் இன்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். அது அவரது நீண்ட நாள் கனவாக இருந்தது. மேற்கத்திய இசையுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானிய இசையை ஒருங்கிணைத்து 1986, 1988ம் ஆண்டுகளில் நீண்ட நேர இசைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். அப்போதே சிம்பொனியில் ஆர்வம் காட்டி வந்தார். மொஸார்ட், பீத்தோவன் வரிசையில் சிம்பொனியை அரங்கேற்றி நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார்.

News March 9, 2025

GST கட்டணம் குறைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

image

விரைவில் ஜிஎஸ்டி கட்டணம் மேலும் குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேவைக்கேற்ப திருத்தங்களைச் செய்ய முயற்சிப்பதாகக் கூறிய அவர், அதனுடன் வரி அடுக்குகள் பகுத்தாய்வு செய்யப்படும் என்றார். ஜிஎஸ்டி அமலானதற்கு பிறகு விலை உயரவில்லை எனவும், வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதே தங்களது இலக்கு என்றும் கூறினார்.

error: Content is protected !!