News August 9, 2024

பரிசுத் தொகைக்கு வரி எவ்வளவு?

image

வருமான வரிச் சட்டம் 1961ன் படி, லாட்டரி உள்ளிட்டவற்றில் வென்றாலும் அந்த பரிசுத்தொகைக்கு அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அவருக்கு பணம் செலுத்தும் முன்பே TDS கழிக்கப்படும். ₹10,000க்கு மேலான பரிசுத்தொகைக்கு 30% TDS கழிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம், செஸ் வரியைச் சேர்த்தால் இத்தொகையில் 31.2% வரை வேறுபாடு இருக்கக் கூடும். பரிசுத்தொகை பெறும் ஒருவர் அதைப் பெற்ற பின் அதற்கான வரியை செலுத்த வேண்டும்.

Similar News

News September 16, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 460 ▶குறள்: நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். ▶பொருள்: ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.

News September 16, 2025

ASIA CUP: தொடரை விட்டே வெளியேறும் PAK?

image

கடந்த IND vs PAK போட்டி டாஸின் போது, போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டின் தலையீடு அதிகமாக இருந்ததாக ICC-க்கு பாக்., கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. டாஸின் போது சூர்யா கைகொடுக்க மாட்டார் என தங்கள் கேப்டன் சல்மானிடம் கூறியதாகவும், இது தொடர்பாக இரு கேப்டன்களிடம் தனித்தனியாக அவர் பேசியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அதனால் அவரை நீக்காவிட்டால், தொடரில் இருந்து வெளியேறுவோம் என்றும் எச்சரித்துள்ளது.

News September 16, 2025

மீனவர்கள் மீது திமுகவுக்கு அக்கறையில்லை: நயினார்

image

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தொடர்ச்சியாக பாஜக விமர்சித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள் கட்டித்தரப்படும் என சொன்னீங்களே, செஞ்சீங்களா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். பல கோடி செலவில் பேனா சிலை அமைக்க ஆர்வம் காட்டும் திமுக, 4 ஆண்டுகளாக மீனவர்களுக்கென ஒரு வீடு கூட கட்டித்தரவில்லை என விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!