News January 8, 2025
HMPV வைரஸ் பரிசோதனைக்கு எவ்வளவு செலவாகும்?

பொதுவாக HMPV போன்ற சுவாச மண்டலத்தை தாக்கும் வைரஸ் தொற்றுகளை உறுதி செய்ய BioFire test என்ற ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளப்படும். சுவாசத்தொற்று ஏற்படுத்தும் பல்வேறு கிருமிகளை கண்டறிய இது உதவும். பெரிய மருத்துவமனைகளில் இந்த லேப் பரிசோதனை வசதி உள்ளது. இந்த டெஸ்டுக்கு, ஹாஸ்பிடல்களை பொறுத்து, ரூ.3000 முதல் ரூ.9000 வரை செலவாகும்.
Similar News
News January 14, 2026
விழுப்புரம்: மருமகன் கண்முன்னே மாமனார் பலி!

விழுப்புரம்: முட்ராம்பட்டைச் சேர்ந்தவர் விவசாயி ராஜாராம். இவரது மருமகன் குணசேகரனுடன் நேற்று புதுச்சேரிக்கு பைக்கில் சென்றார். பின்னர் மீண்டும் விழுப்புரத்தை நோக்கி திரும்பியபோது, கெங்கராம்பாளையம் அருகே கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராஜாராம் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், குணசேகரன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 14, 2026
அதிமுக கூட்டணியில் இணைந்தார்

ஊராளிக் கவுண்டர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் NV நாகராஜ், EPS-யை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். நேற்று தமமுகவின் நிறுவனர் <<18845319>>ஜான் பாண்டியன்<<>>, தாங்கள் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்திருந்த நிலையில், அடுத்தடுத்து கூட்டணியை இறுதி செய்யும் பணியில் EPS இறங்கியுள்ளார். வரும் 23-ம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்ய அதிமுக மும்முரம் காட்டி வருகிறது.
News January 14, 2026
இது ரவுடித்தனம். சுதா கொங்கரா டைரக்ட் அட்டாக்!

முகம் தெரியாத ID-க்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்புகிறார்கள் என சுதா கொங்கரா கடுமையாக விமர்சித்துள்ளார். இது அரசியல் ரீதியான எதிர்ப்பு இல்லை என குறிப்பிட்ட அவர், வெளிவராத படத்தின் நடிகரின் ரசிகர்களின் செய்வது என நேரடியாக விஜய் ரசிகர்களை குற்றம் சாட்டினார். மேலும், இது ரவுடித்தனத்தை என சுட்டிக்காட்டி, அதனை தாங்கள் எதிர்த்து போராடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


