News February 9, 2025
ஒரு நாளில் எவ்வளோ ஸ்டெப்ஸ் நடக்குறீங்க?

ஒரு நாளைக்கு 3,600 ஸ்டெப்ஸ் மிதமான வேகத்தில் நடப்பது இதய பிரச்னைகளை 26% குறைக்கும் என ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. நியூயார்க்கில் அமைந்துள்ள பஃபலோ யூனிவர்சிட்டி விஞ்ஞானிகள் 63 -99 வயதுடைய 6,000 அமெரிக்கர்களை ஆய்வு செய்து இதனைக் கண்டறிந்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகள் இவ்வாறு நடைப்பயிற்சியில் ஈடுபட்ட 407 இதய நோயாளிகளுக்கு இதய பிரச்னைகள் வருவது குறைந்து இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
Similar News
News March 4, 2026
பயங்கரமான ஸ்கெட்ச்: USA-விற்கு ஷாக் கொடுத்த ஈரான்!

கத்தார் உள்ளிட்ட நாடுகளின் ஏவுகணை தளங்களை பயன்படுத்தி US தாக்கி வருகிறது. குறைந்த கையிருப்பிலான ஏவுகணைகளே US அங்கு இருப்பதால், அதை முதலில் அழிக்க ஈரான் முடிவெடுள்ளதாம். அதனால்தான், Patriot ஏவுகணையை(₹33 கோடி) வீணடிக்க Shahed ட்ரோன்களை(₹17 லட்சம்) ஈரான் பயன்படுத்தியது. ஏவுகணைகள் காலியானால், பாதுகாப்பு தளங்களை தாக்கி, போரை நிறுத்த அந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாம்.
News March 4, 2026
தமிழ் நடிகை உடை மாற்றும்போது.. அதிர்ச்சி

சென்னையில் பிரபல சீரியல் நடிகை உடை மாற்றும்போது எட்டிப் பார்த்ததாக Ex ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். ஷூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய அவர், உடை மாற்றியுள்ளார். அப்போது ஜன்னல் வழியாக Ex வீரர் பார்த்ததை அறிந்த நடிகை, உடனடியாக போலீஸுக்கு தகவல் அளிக்க, Ex வீரர்கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபைச் சேர்ந்த அவர், ஏற்கெனவே நடிகையை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
News March 4, 2026
குஞ்சு பொரித்தவுடன் எத்தனை சீட் என சொல்வோம்: மநீம

திமுக கூட்டணிக்கு மநீம எப்படி வலுசேர்க்கும் என்ற தரவுகளை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவிடம் ஒப்படைத்துள்ளோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைதான் என்றார். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதை கோழி அடைகாப்பதை போல அடைகாத்து வருகிறோம் என்றும், குஞ்சு பொறிக்கும் போது உங்களுக்கே தெரியும் எனவும் கூறியுள்ளார்.


