News March 16, 2024
இந்த முறை எத்தனை கட்டமாக தேர்தல் நடைபெறும்?

தேர்தல் தேதி இன்று வெளியாக உள்ள நிலையில், எத்தனை கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2004இல் 4 கட்டங்களாகவும், 2009இல் 5 கட்டங்களாகவும், 2014இல் 9 கட்டங்களாகவும், 2019இல் 7 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த முறை மார்ச் 10ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், இம்முறை சற்று தாமதமாகியுள்ளது.
Similar News
News January 10, 2026
விஜய்யின் பிரசார வாகனம் பறிமுதல்.. CBI சோதனை!

விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்த CBI அதிகாரிகள் கரூரில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்று பஸ்ஸில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், விஜய்யின் பிரசார பஸ் டிரைவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. நாளை மறுதினம் விஜய், டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராக CBI அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இந்த சோதனையானது கவனத்தை பெற்றுள்ளது.
News January 10, 2026
மீண்டும் விஜய் – அஜித் மோதல்?

‘ஜனநாயகன்’ தொடர்பான வழக்கு விசாரணை ஜன.21-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஜன.23-ல் அஜித்தின் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. ஒருவேளை ஜனநாயகனுக்கு சர்டிபிகேட் கிளியர் ஆனால், அப்படமும் ஜன.23-ல் வெளியாக வாய்ப்புள்ளது. ஜன நாயகன் பிரச்னை தீர்ந்தால், வாரிசு – துணிவு படங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் – அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. மீண்டும் ஒரு Clash-க்கு ரெடியா?
News January 10, 2026
விஜய்யை அடிபணிய வைக்க முயற்சியா? கருணாஸ்

விஜய்யின் ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமான விஷயம் என கருணாஸ் தெரிவித்துள்ளார். ஏதோ ஒரு அரசியல் சூழ்ச்சிக்காக விஜய்யை அடிபணிய வைக்கவும், நிர்பந்தத்தை ஏற்படுத்தவும் தணிக்கை வாரியத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுவதாக அவர் கூறியுள்ளார். மேலும், இப்பிரச்னையில் விஜய்க்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் துணைநிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


