News April 1, 2025
இன்னும் எத்தனை 3 மாதங்கள்? கேள்வி கேட்கும் பெண்கள்

தகுதியுடைய விடுபட்ட பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை 3 மாதத்திற்குள் அளிக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் முதலில் அறிவித்தார். இதே கருத்தையே அடுத்தடுத்து செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் உதயநிதி தெரிவித்தே 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அமைச்சர்கள் 3 மாதங்கள் என பொதுவாக தெரிவிப்பதை பார்க்கும் பெண்கள், இன்னும் எத்தனை 3 மாதங்கள் ஆகும் என கேள்வி கேட்கின்றனர்.
Similar News
News October 25, 2025
அரசியல் களத்தில் விஜய் தடுமாறுவது ஏன்?

சினிமாவில் ஜொலித்த விஜய்க்கு அரசியல் களத்தில் அடுத்தடுத்து தடைகள் ஏற்பட்டு வருகின்றன. சோசியல் மீடியா மற்றும் பிரசார களங்களில் பம்பரமாக சுழன்று வந்த அக்கட்சியின் தொண்டர்கள் சிறிது காலமாக சைலண்ட் மோடில் உள்ளனர். இதற்கு கரூர் சம்பவம் காரணமாக கூறப்பட்டாலும், சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் விஜய் தடுமாறுவதாகவும் கூறுகின்றனர். தங்களது ஆதங்கத்தை சிலர் விஜய்யை Tag செய்து X பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
News October 25, 2025
BREAKING: தங்கம் விலை ₹800 உயர்வு

தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை கண்டுள்ளது. இன்று(அக்.25) சவரனுக்கு ₹800 அதிகரித்துள்ளது. 22 கேரட் 1 கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹11,500-க்கும், சவரன் ₹92,000-க்கும் விற்பனையாகிறது. நேற்று மாலை நேர வர்த்தகத்தில் ₹1,120 குறைந்திருந்த நிலையில், மிகப்பெரிய மாற்றமாக மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹170-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,70,000-க்கும் விற்பனையாகிறது.
News October 25, 2025
பூனைகள் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

மனிதர்களுடன் செல்லம் கொஞ்சும் பிராணிகளில் ஒன்று பூனை. மனிதர்களுடன் எப்போதும் இணைந்தே இருக்கும் ஒரு செல்லப்பிராணி. நம் வாழ்வின் இன்ப, துன்பங்களில் பங்கு கொள்ளும், அமைதியான ஆறுதலை தரும் உயிர் துணைகள். இப்படிப்பட்ட பூனைகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில ஆச்சர்யமூட்டும் விஷயங்களை அறிய மேலே ஸ்வைப் பண்ணி பாருங்க…


