News October 27, 2025

எவ்வளவு கலோரிக்கு எவ்வளவு நிமிடம் நடக்க வேண்டும்?

image

நடைபயிற்சி செய்வதால், உடலில் நிமிடத்திற்கு சராசரியாக 3-4 கலோரி எரிகிறது. 1 மணி நேரம் நடந்தால், சராசரியாக 234 – 250 கலோரிகளை எரிக்கலாம். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் எவ்வளவு கலோரிகள் உள்ளன, அதற்கு எவ்வளவு நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News January 20, 2026

குடும்பங்களை சீரழிப்பதில் திமுக சாதனை: அன்புமணி

image

TN-ல் பொங்கலையொட்டி ₹850 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அன்புமணி, குடும்பங்களை சீரழிப்பதில் திமுக மீண்டும், மீண்டும் சாதனை படைப்பதாக விமர்சித்துள்ளார். ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்துதில் அரசு தோல்வியடைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மது விற்பனை ஓராண்டில் 20% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமல்ல; சமூக சீரழிவின் அடையாளம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News January 20, 2026

தமிழக அரசு மீது கவர்னர் சரமாரி குற்றச்சாட்டு

image

<<18904041>>சட்டப்பேரவையில் இருந்து கவர்னர் ரவி<<>> வெளியேறியது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. *உரையில் பெண்களின் பாதுகாப்பு *போதைப்பொருள் பழக்கத்தால் 2,000 பேர் தற்கொலை *பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரிப்பு *அறங்காவலர் குழுக்கள் இன்றி கோயில்களை மாநில அரசு நிர்வகிப்பது உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகள் தமிழக அரசின் உரையில் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

News January 20, 2026

தவெகவில் இருந்து செங்கோட்டையன் விலகலா?

image

தேர்தலுக்கு முன்பே கட்சி மாற <<18903913>>KAS<<>> திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது உண்மைக்கு மாறான செய்தி என செங்கோட்டையன் தனது X பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தனக்கு சோதனை ஏற்பட்ட போது, தனது கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைக்கின்ற அளவிற்கு இன்று தன்னை விஜய் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2026-ல் விஜய்யை CM ஆக்குவதற்கு ஒற்றுமையுடன் உழைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!