News July 18, 2024
இந்தியர்கள் எவ்வளவு மணிநேரம் உழைக்கின்றனர்?

இந்தியாவைப் பொறுத்தவரை ஒருவர் வாரமொன்றுக்கு, சராசரியாக 46.7 மணி நேரம் வேலை செய்வதாக உலக தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், அமெரிக்கர்கள் 38 மணி நேரமும், சீனர்கள் 46.1 மணி நேரமும் உழைப்பதாகக் கூறியுள்ளது. வாராந்தர அளவில் ஜெர்மன் – 34.2, ஜப்பான் – 36.6 , இங்கிலாந்து – 35.9, பிரான்ஸ் – 35.9, பிரேசில் – 39, இத்தாலி – 36.3, கனடா – 32.1 மணி நேரம் உழைப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஊக்கமளிக்கிறது: PM மோடி

2025-26-ம் ஆண்டின் 2-ம் காலாண்டில் 8.2% உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கண்டது ஊக்கமளிப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சி ஆதரவு கொள்கைகள் மற்றும் சீர்திருந்தங்களின் தாக்கத்தை இது பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் கடின உழைப்பு, முயற்சியின் வெளிப்பாடு இது என்றும், அரசு தொடர்ந்து சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் சென்று ஒவ்வொருவரின் வாழ்வையும் எளிதாக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
News November 28, 2025
இனி II CLASS ஸ்லீப்பர் கோச்சில் பெட்ஷீட், தலையணை உண்டு!

ரயில்களில் வழக்கமாக AC வகுப்புகளில் மட்டுமே பயணிகளுக்கு பெட்ஷீட்டும், தலையணையும் வழங்கப்படும். இந்நிலையில் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து Non AC ஸ்லீப்பர் கோச்சிலும், ₹50 செலுத்தி பெட்ஷீட், தலையணையை பெற்றுக்கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், தலையணை மட்டும் ₹30-க்கும், பெட்ஷீட்டை ₹20-க்கும் கூட பெற்றுக் கொள்ளலாம். அடிக்கடி ரயிலில் பயணிக்கும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க..
News November 28, 2025
14 வயது சிறுமி, 13 வயது சிறுவன் காதல்… அதிர்ச்சி!

14 வயது சிறுமியும், 13 வயது சிறுவனும் காதல் மயக்கத்தில் வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா, விஜயவாடாவில் சிறுமியை கூட்டிக் கொண்டு கையில் அப்பாவின் மொபைல் போன் மற்றும் ₹10 ஆயிரத்துடன் வந்து இறங்கியுள்ளான். ஹோட்டல் ரூம் தேடிய சிறுவனை பார்த்து சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் போலீஸுக்கு தகவல்தர, இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெற்றோரே கவனிங்க!


