News April 17, 2025
எத்தனை என்கவுன்ட்டர்கள்? ஹைகோர்ட் கிளை கேள்வி

சமீபத்தில் எத்தனை என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன என்று காவல்துறைக்கு ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த கோர்ட், காவல்துறையினரின் பாதுகாப்புக்குதான் துப்பாக்கி அளிக்கப்பட்டு உள்ளது என்றும், சுடுவதற்கு அல்ல என்றும் தெரிவித்தது. குற்றவாளிகளை காலுக்கு கீழேதான் சுட வேண்டும் என்றும் காவல்துறைக்கு கோர்ட் அறிவுறுத்தியது.
Similar News
News November 27, 2025
மாபெரும் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

சையது முஷ்டாக் அலி கோப்பையில், கேரள ஓப்பனர்கள் சஞ்சு சாம்சன் & ரோகன் குன்னும்மாள் முதல் விக்கெட்டுக்கு 177 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளனர். ஒடிசாவுக்கு எதிரான ஆட்டத்தில், ரோஹன் 10 சிக்ஸர்களுடன் 121(60)* ரன்களை விளாச, சஞ்சு 51*(41) ரன்கள் அடித்தார். தொடர் வரலாற்றில் இதுவே அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப். இப்போட்டியில், ஒடிசா 20 ஓவரில் 176/7 ரன்கள் எடுக்க, கேரளா 16.3 ஓவரில் வெற்றி பெற்றது.
News November 27, 2025
தமிழக பாஜக தலைவர் மாற்றமா?

நயினாரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால், டெல்லிக்கு அழைத்த பாஜக தலைமை, அவருக்கு சில அறிவுரைகள் வழங்கியதாக தகவல் வெளியானது. இதனால் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு, நாராயணன் திருப்பதி மறுப்பு தெரிவித்துள்ளார். NDA கூட்டணி வெற்றி பெற்றுவிடுமோ என்ற பயத்தில், திமுக இதுபோன்ற வதந்தியை பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தலைவர் பதவியில் மாற்றமில்லை என்றும் அவர் கூறினார்.
News November 27, 2025
சனி தொல்லையை நீக்கும் வெற்றிலை பரிகாரம்!

சனீஸ்வர பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட வெற்றிலை வழிபாடு உதவும். ஒரு தட்டில் 2 வெற்றிலை, 3 பாக்குகள், 11 நாணயங்களை வைக்கவும். அதன் முன், நெய்யில் தீபம் ஏற்றி வையுங்கள். இயன்ற ஒரு பொருளை நெய்வேத்தியமாக படைக்கவும். வடக்கு திசை பார்த்தவாறு ‘ஸ்ரீ சொர்ண ஆகர்சன பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். இந்த பரிகாரத்தை வளர்பிறை அஷ்டமியில் செய்வது கூடுதல் பலனை கொடுக்கும். SHARE IT.


