News October 16, 2025
ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?

நமக்கு தினசரி கிடைக்கும் சத்துகள் நிறைந்த உணவு முட்டை தான். இதில் சுமார் 7 கிராம் புரோட்டீன், வைட்டமின் A, B, B12, ஃபோலேட், இரும்பு மற்றும் செலினியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. எனவே, ஒருவர் தினசரி 2 முதல் 3 முட்டைகள் (மஞ்சள் கருவுடன்) சாப்பிடலாம். பலரும் மஞ்சள் கருவை தவிர்க்கின்றனர். ஆனால் மஞ்சள் கருவில்தான் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்கள்.
Similar News
News October 16, 2025
டிஜிட்டல் அரஸ்ட்: முதியவரிடம் ₹58 கோடி மோசடி

வசதிபடைத்த முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் மோசடிகள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. சமீபத்தில் மும்பையில் வசிக்கும் 72 வயது தொழிலதிபருக்கு சிபிஐ பெயரில் வீடியோ கால் வந்துள்ளது. அதில் நீங்கள் பண மோசடியில் ஈடுபட்டதாக, போலி ஆவணங்களை காட்டி மிரட்டி ₹58 கோடியை பறித்துள்ளனர். இதுதொடர்பாக இதுவரை 3 பேரை கைது செய்த காவல்துறை, முக்கிய குற்றவாளிகளை தேடி வருகிறது. மக்களே உஷார்
News October 16, 2025
சத்தீஸ்கரில் ஒரேநாளில் 171 நக்சல்கள் சரண்

சத்தீஸ்கரில் இன்று ஒரே நாளில் 171 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். அரசமைப்பை நம்பி வன்முறையை கைவிட்டு வந்தவர்களை பாராட்டுவதாகவும், மோடி அரசின் தீவிர நடவடிக்கையால் நக்சலிசம் அழிவின் இறுதியில் உள்ளதாகவும் கூறியுள்ளார். மீதமுள்ள நக்சல்களும் சரணடைய வேண்டும் என வலியுறுத்திய அவர், இல்லையென்றால் ஆயுதப்படைகள் அவர்களை வீழ்த்தும் எனவும் எச்சரித்துள்ளார்.
News October 16, 2025
பழைய பென்ஷன் திட்டம்: பேச்சுவார்த்தைக்கு அரசு தயார்

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க ₹1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.