News April 4, 2025
அந்த வீரனுக்கு எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்..

குஜராத்தில் நேற்று நள்ளிரவு இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் ஹரியானாவைச் சேர்ந்த லெப்டினன்ட் சித்தார்த் யாதவ் (28) உயிரிழந்தார். இவருக்கு 10 நாள்களுக்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நவம்பர் 2ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில், அநியாயமாக உயிர் பறிபோயுள்ளது. சித்தார்த்தின் பூட்டன், தாத்தா, அப்பா என அவரது குடும்பமே ராணுவ சேவை செய்தவர்களாவர்.
Similar News
News November 23, 2025
பாடம் கற்றுக்கொண்ட விஜய்

கரூர் துயரிலிருந்து விஜய் பாடம் கற்றுக்கொண்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அத்துயருக்கு விஜய் தாமதமாக சென்றதே காரணம் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இன்றைய நிகழ்ச்சிக்கு விஜய் 30 நிமிடங்கள் முன்பாகவே வந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தையுடன் சென்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. யாரும் சோர்வடையாமல் இருக்க உணவும் தரப்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் தொண்டர் படை ஈடுபட்டிருந்தனர்.
News November 23, 2025
BREAKING: இந்திய அணியின் கேப்டனாக KL ராகுல் நியமனம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக KL ராகுல் அறிவிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் புதிய கேப்டனான அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 15 பேர் கொண்ட இந்திய அணி(மேலே பட்டியல்) அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், துருவ் ஜுரெல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். திலக் வர்மா, ருதுராஜ், ஜடேஜா ஆகியோருக்கு அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
News November 23, 2025
2-வது டெஸ்ட்: மீண்டெழுமா இந்திய அணி?

கவுஹாத்தி டெஸ்ட்டில், 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்துள்ளது. முத்துசாமி, யான்சனின் அபார ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்தது. குல்தீப் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இன்றும் போதிய வெளிச்சமின்மையால் 76.1 ஓவர்களே வீசப்பட்டன. போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியாவுக்கு நாளை மிகவும் முக்கியமான நாளாகும்.


