News April 26, 2025
பாகிஸ்தானுடன் எத்தனை பார்டர் கிராஸிங் உள்ளன?

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. உடனடியாக இந்திய அரசு, வாகா – அத்தாரி எல்லையை மூடி உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ரோட் பார்டர் கிராஸிங் உள்ளன. ➙வாகா எல்லை ➙கர்தர்பூர் எல்லை ➙கந்தா சிங் வாலா எல்லை ஆகியவை உள்ளன. இதில் கர்தர்பூர் எல்லை இன்னும் சீக்கியர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 17, 2026
பற்றி எரியும் ஈரான்.. களத்தில் இறங்கிய புடின்!

<<18874125>>ஈரான்<<>> விவகாரத்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர் பதற்றம் நிலவும் நிலையில், அதை தணிக்கும் வகையில் ரஷ்ய அதிபர் புடின் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் மற்றும் இஸ்ரேல் PM நெதன்யாகுவுடன் அவர் போனில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே அமைதி நிலவ மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
News January 17, 2026
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஸ்பிரிட்’ ரிலீஸ் தேதி இதுதான்!

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் பான் இந்தியா படமான ‘ஸ்பிரிட்’, 2027 மார்ச் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ படங்களுக்கு பிறகு சந்தீப் ரெட்டி இயக்கும் படம் என்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதேபோல், சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
News January 17, 2026
ஜனவரி 17: வரலாற்றில் இன்று

*1706 – அமெரிக்க விஞ்ஞானி பெஞ்சமின் ஃபிராங்கிளின் பிறந்தார். *1773 – இங்கிலாந்து கப்பல் கேப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக்காவை அடைந்தார். *1917 – தமிழக முன்னாள் CM எம்.ஜி. ஆர் பிறந்தார். *1942 – அமெரிக்க குத்து சண்டை வீரர் முகம்மது அலி பிறந்தார். *2010 – மேற்கு வங்கத்தின் முன்னாள் CM மற்றும் CPM கட்சியின் முக்கிய தலைவரான ஜோதி பாசு காலமானார்.


