News September 3, 2024
புழக்கத்தில் உள்ள ₹2,000 நோட்டுக்கள் எவ்வளவு?

பொதுமக்களிடம் ₹7,261 கோடி மதிப்புள்ள ₹2,000 நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதாக RBI அறிவித்துள்ளது. கடந்த 2023 மே 19 அன்று நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்த போது, ₹3.56 லட்சம் கோடி நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்ததாகவும், தற்போது 97.96% திரும்பப் பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள 19 RBI அலுவலகங்களில் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 20, 2025
இது போலியானது! யாரும் ஏமாற வேண்டாம்!

ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியதாக தகவல் வெளியாக, ரசிகர்கள் பலரும் போட்டி போட்டு கொண்டு டிக்கெட் புக் செய்தனர். ஆனால், தற்போது நடைபெற்று வரும் டிக்கெட் விற்பனை போலியானது என்றும், அதிகாரப்பூர்வமாக டிக்கெட் விற்பனை இன்னும் தொடங்கவில்லை என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆகவே ரசிகர்களே உஷாரா இருங்க!
News August 20, 2025
PM, CM பதவி பறிப்பு மசோதா லோக்சபாவில் தாக்கல்

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் வரை சிறையில் இருந்தால், அவர்களை பதவிநீக்கம் செய்யும் மசோதாவை லோக்சபாவில் அமித்ஷா தாக்கல் செய்தார். மத்திய அரசின் இந்த மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்
News August 20, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17461215>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி- தருமபுரி.
2. 15 ஆகஸ்ட், 1969.
3. கும்பகோணம்.
4. அஸ்ஸாம்
5. மன்சூர் அலி கான் பட்டோடி