News April 20, 2025
எவ்வளவு நாள்தான் கெட்டவனாகவே நடிக்கிறது?

ஒரு நடிகனாக அடுத்த கட்டத்திற்கு செல்லும் காலம் வந்துவிட்டதாக SJ சூர்யா தெரிவித்துள்ளார். ரொம்ப நாளைக்கு வில்லனாகவே சுத்திக் கொண்டு இருக்க முடியாது எனவும், அதற்காக தான் நடிக்க வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ‘கில்லர்’ என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாகவும், தன்னுடைய இயக்கத்தை பார்க்க ஆசைப்படுகிறவர்களுக்கு கண்டிப்பாக இப்படம் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
பிரபல நடிகை அம்மா ஆனார்.. FIRST PHOTO ❤️❤️

பாலிவுட் லவ் பேர்ட்ஸ் கியாரா அத்வானி & சித்தார்த் மல்கோத்ரா தங்கள் மகளின் போட்டோவை முதல்முறையாக வெளியிட்டுள்ளனர். அந்த போட்டோவில் இருவரும் தங்களின் உயிர்வரவான குழந்தையின் காலை தாங்கி பிடித்த உள்ளனர். இவர்களுக்கு கடந்த ஜூலை 15-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. மேலே உள்ள போட்டோவை Swipe செய்து ஜூனியர் கியாராவை பாருங்க. ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படத்தில் கியாரா நடித்திருந்தார்.
News November 28, 2025
‘டிட்வா’ எதிரொலி: காய்ச்சல் முகாம்களுக்கு உத்தரவு

டிட்வா புயல் எதிரொலியாக ஹாஸ்பிடல்களில் டாக்டர்கள் முழு நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மா.சு., தெரிவித்துள்ளார். மழைக்கு பின் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஹாஸ்பிடல்களில் மின்சாரம் தடைபடாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், ஹாஸ்பிடல் அருகே மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News November 28, 2025
பைசன் படத்தை புகழ்ந்த கிரிக்கெட்டர் DK

பைசன் திரைப்படம் அருமையாக இருப்பதாக கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். மாரி செல்வராஜின் படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதில் தத்ரூபமாக நடிக்க துருவ் கடுமையான உழைப்பை போட்டிருப்பது தெரிவதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்ததாக கூறிய அவர், படக்குழுவுக்கு தன்னுடைய வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.


