News March 29, 2025
நீங்க எவ்வளவு நேரம் போன் பாக்குறீங்க?

இப்போதெல்லாம் காலை கண் விழிப்பதே போனின் அலாரம் சத்தம் கேட்டு தான். கையுடன் போனை ஒட்டிவைத்தது போல ஆகிவிட்டது நிலைமை. ஒரு இந்தியர், சராசரியாக ஒரு நாளில் 5 மணி நேரம் வரை போனை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக இந்தியர்கள் 1.1 லட்ச கோடி மணி நேரத்தை போனை பார்த்து செலவழித்திருப்பதாக கூறப்படுகிறது. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் போன் பாக்குறீங்க?
Similar News
News April 1, 2025
ரஷ்யாவிற்கு ஆயுத டெக்னாலஜி வழங்கிய இந்தியா?

இந்திய பொதுத்துறை நிறுவனமான HAL, ரஷ்யாவிற்கு தடைசெய்யப்பட்ட ஆயுத தொழில்நுட்பத்தை வழங்கியதாக அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இது உண்மைக்கு புறம்பான செய்தி எனவும், சில அரசியல் நோக்கங்களுக்காக தவறாக வழிநடத்த இந்த செய்தி புனையப்பட்டுள்ளதாகவும் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. மேலும், உண்மையை ஆராய்ந்து செய்தி வெளியிடவும் அறிவுறுத்தியுள்ளது.
News April 1, 2025
விண்வெளியில் இருப்பது எப்பவும் பிடிக்கும்: சுனிதா

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி 12 நாள்கள் கழித்து சுனிதா, பட்ச் வில்மோர், நிக் ஹேக் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுனிதா பேசும்போது, விண்வெளியில் நேரத்தை செலவிடுவது தனக்கு எப்போதும் பிடிக்கும் எனவும், அங்கு நிறைய ஆராய்ச்சிகளை செய்ததாகவும் கூறினார். மேலும், தங்களை விண்வெளியில் இருந்து பத்திரமாக பூமிக்கு கொண்டுவந்த டிரம்ப், மஸ்கிற்கு நன்றியுள்ளவராக இருப்பேன் எனவும் தெரிவித்தார்.
News April 1, 2025
அண்ணா பொன்மொழிகள்

*எதிரிகள் தாக்கித்தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கித்தாங்கி வலுவை பெற்றுக் கொள்ளுங்கள். *பிறருக்குத் தேவைப்படும்போது நல்லவர்களாகத் தெரியும் நாம்தான், அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாகிவிடுகிறோம். *புகழைத் தேடி நாம் செல்லக்கூடாது, அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும். *உலகின் பிளவு, குடும்பத்தில் தொடங்குகிறது. *ஊக்கத்தை கைவிடாதே, அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு.