News January 7, 2025
எப்படி பரவுகிறது HMPV வைரஸ்?

HMPV வைரஸ் நாட்டில் பரபரப்பை உண்டாக்கி வருகிறது. பாதிக்கப்பட்ட நபர் தும்மும் போதோ அல்லது இருமும் போதோ வெளிவரும் நீர்த்துளிகள் மூலமாக, பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிப் பழகுவதன் மூலமாக பிறருக்கு பரவுகிறது. அதிகமாக எதிர்ப்புசக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களையே இது தாக்குகிறது. உடலில் நுழைந்த 3-6 நாள்கள் கழித்தே அறிகுறிகள் (சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல்) தெரிகிறது.
Similar News
News January 17, 2026
Gold Rate-ஐ குறைக்க நடவடிக்கை எடுப்பாரா நிர்மலா?

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று சவரனுக்கு ₹1,06,240-க்கு விற்கப்படும் நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கம் விலையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது, 2024-ல் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15%-லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டது. அதேபோல், வரும் பட்ஜெட்டிலும் தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைத்தால், தங்கம் விலை கணிசமாக குறையும்.
News January 17, 2026
அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் (PHOTOS)

சட்டப்பேரவை தேர்தலுக்காக 5 முக்கிய வாக்குறுதிகளை EPS அறிவித்துள்ளார். *ரேஷன் அட்டை உள்ள அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் ₹2,000 உதவித்தொகை. *ஆண்களுக்கும், மகளிரைப் போலவே டவுன் பஸ்களில் இலவச பயணம். *அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் கிராமங்கள், நகரங்களில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு. *100 நாள்கள் வேலைத் திட்டம் 150 நாள்களாக மாற்றப்படும். *5 லட்சம் மகளிருக்கு ₹25,000 மானியத்தில் ஸ்கூட்டர்.
News January 17, 2026
அண்ணாமலைக்கு புதிய பதவியா?

பாஜகவில் நயினாரும், அண்ணாமலையும் எதிரும் புதிருமாக இருந்து வந்தது டெல்லி தலைமையை அப்செட் செய்திருந்தது. இதனால், அவர்களை அழைத்து மத்தியஸ்தம் செய்திருக்கிறது டெல்லி பாஜக. இதனால் அண்ணாமலையும் சற்றே அனுசரித்து போக, அவருக்கு புதிய பதவி ஒன்றை கொடுக்க டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாம். அத்துடன் தேர்தல் களத்தில் பிரசார பீரங்கியாகவும் அண்ணாமலையை பயன்படுத்த பாஜக தரப்பில் திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.


