News March 27, 2025
எப்படி இருக்கிறது ‘L2: எம்புரான்’? Review & Rating!

குரோஷி ஆப்ரகாமின் கதையை சொல்கிறது ‘L2: எம்புரான்’. பிளஸ்: மோகன்லால் அசத்தி இருக்கிறார். இன்டர்வெல் காட்சி, இரண்டாம் பாதியின் அரசியல் மற்றும் காட்டில் நடக்கும் ஆக்ஷன் பிளாக்கிற்கு பயங்கர கிளாப்ஸ். மேக்கிங் தரமாக உள்ளது. மியூசிக், ஒளிப்பதிவு இரண்டுமே பலம். பிருத்விராஜ் ஸ்டைலிஷான படம் கொடுத்துள்ளார். மைனஸ்: படத்தின் நீளம் கொஞ்சம் ஜாஸ்தி. மெதுவான முதல் பாதி காட்சிகள் சோதிக்கின்றன. Rating: 3/5.
Similar News
News December 14, 2025
சுப்மன் கில் டி20-க்கு கண்டிப்பாக தேவை: ஏபிடி

டி20-ல் தொடர்ந்து சொதப்பி வரும் சுப்மன் கில்லை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் ஒன்று இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாததால் கில்லை நீக்குவது சரியானதாக இருக்காது என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். அதிரடி வீரர்கள் நிறைந்த இந்திய அணியில் கில் போன்றவர் நிச்சயம் தேவை என்றும், முக்கியமான போட்டியில் அவர் ரன்களை குவிப்பார் என்றும் ஏபிடி கூறியுள்ளார்.
News December 14, 2025
வரலாற்றில் இன்று

*1812 – ரஷ்யா மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
*1799 – அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் மறைந்த நாள்.
*1959 – தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார் மறைந்தநாள்.
*1965 – இயக்குநர் வசந்த் பிறந்த தினம்.
*1984 – நடிகர் ராணா டகுபதி பிறந்தநாள்.
News December 14, 2025
‘பராசக்தி’ படம் ரிலீஸில் மாற்றமா?

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் பொங்கலையொட்டி ஜன.14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்று தெலுங்கில் பெரிய ஹீரோக்களின் 3 படங்கள் வெளியாக இருப்பதால், ஆந்திராவில் பராசக்திக்கு தியேட்டர்கள் கிடைக்காது என கூறப்படுகிறது. இதனால் விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியாகும் ஜன 9-ம் தேதி, SK-வின் படமும் வெளியாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.


