News September 6, 2025
இந்திய அணியின் புது ஜெர்ஸி எப்படி இருக்கு?

வரும் 9-ம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பயிற்சியின் போது, முதன்முறையாக <<17592762>>ஸ்பான்சர்<<>> இல்லாத ஜெர்ஸியை அணிந்து கொண்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். இதை பார்த்த ரசிகர்கள், பழைய ஸ்பான்சர்ஷிப் ஜெர்ஸிகளை விட, இந்த புதிய டிரெய்னிங் ஜெர்ஸிகள் அருமையாக உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர். உங்க கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News March 13, 2026
வேலைவாய்ப்பு: கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் இன்று (13.03.2026) காலை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடும் இளைஞர்கள் பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
ரத்த ஆறு ஓடும்: ஈரான் எச்சரிக்கை

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரானுக்கு சொந்தமான தீவுகள் மீது போர் தொடுத்தால் பாரசீக வளைகுடாவில் ரத்த ஆறு ஓடும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைக்கு போர் முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்பதால், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையும் என அச்சம் எழுந்துள்ளது.
News March 13, 2026
பெட்ரோல் விலையை உயர்த்திய நாடுகள்

ஈரான் போர் நடந்து வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால், சுமார் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. இதில், கம்போடியா – 68%, வியட்நாம் -49%, நைஜீரியா – 35%, லாவோஸ் – 32.9%, கனடா – 28%, பாகிஸ்தான் – 24%, மாலத்தீவு – 18.5%, ஆஸ்திரேலியா – 18.2%, அமெரிக்கா – 16.5%, சிங்கப்பூர் – 15.6% ஆகிய நாடுகள் அதிக விலை உயர்வை சந்தித்துள்ளன.


