News May 3, 2024
ரயிலில் அபாயச் சங்கிலி எப்படி செயல்படுகிறது?

ரயிலில் பயணிக்கும் பெரும்பாலானவர்களுக்கு அபாயச் சங்கிலி குறித்து தெரிந்திருக்கும். இதைப் பிடித்து இழுத்தால், ரயில் ஓட்டுநருக்கு சிக்னல் கிடைத்து அவர் ரயிலை நிறுத்துவார் என நினைப்போம். ஆனால், அது முற்றிலும் தவறு. ரயில் பெட்டிகளில் உள்ள அபாயச் சங்கிலிகள் பிரேக் பிரஷர் உடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். அதைப் பிடித்து இழுக்கும்போது, பிரஷர் ரிலீஸாகி வேகம் வெகுவாகக் குறைந்து ரயில் தானாக நிற்கும்
Similar News
News August 29, 2025
இந்த பைக்குகளின் விலை ₹45,000 வரை உயருகிறது

அடுத்த மாதம் நடைபெற உள்ள GST கவுன்சில் கூட்டத்தில், பிரீமியம் ரக 2 சக்கர வாகனங்கள் மீதான வரி உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 350 சிசிக்கும் அதிகமான திறன் கொண்ட 2 சக்கர வாகனங்களுக்கு தற்போது 28% GST + 3% செஸ் என 31% வரிவிதிக்கப்படும் நிலையில், அது 40% ஆக உயர வாய்ப்புள்ளது. அதன்படி ராயல் என்ஃபீல்டு, அப்ரிலியா, ஹார்லி டேவிட்சன், KTM பைக்குகளின் விலை ₹25,000 – ₹45,000 வரை உயர வாய்ப்புள்ளது.
News August 29, 2025
டிரம்ப் ரஷ்யாவிற்காக வேலை செய்கிறார்: போர்ச்சுகல் அதிபர்

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய நலன்களுக்காகவே டிரம்ப் பாடுபடுவதாக போர்ச்சுகல் அதிபர் மார்சிலோ டி சௌஸா விமர்சித்துள்ளார். டிரம்ப் ரஷ்யாவின் சொத்து என்றும், மத்தியஸ்தம் செய்வதில் அவர் ஒன்றும் சிறந்தவர் இல்லை என்றும் டி சௌஸா சாடியுள்ளார். டிரம்ப் ரஷ்ய ஆதரவு குற்றச்சாட்டிற்கு உள்ளாவது இது முதல்முறை கிடையாது. டிரம்பின் தேர்தல் பிரசாரங்களை ரஷ்யா வகுத்து கொடுப்பதாக 2016-ல் ஜனநாயக கட்சி விமர்சித்தது.
News August 29, 2025
‘அமித்ஷா தலையை வெட்ட வேண்டும்’.. வெடித்தது சர்ச்சை

‘ஊடுருவல்காரர்கள் நமது நிலங்களை பறிப்பதாக குடிமக்கள் புகார் அளித்தால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அமித்ஷாவின் தலையை வெட்டி மேஜையில் வைப்பதுதான்’ என TMC MP மகுவா மொய்த்ரா கூறியதாக சர்ச்சை எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் போலீஸில் புகாரளித்துள்ளனர். இந்நிலையில், மகுவா மொய்த்ரா பேச்சு திரித்து பரப்பப்படுவதாக TMC செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் விளக்கம் அளித்துள்ளார்.