News February 16, 2025
சூரியன் உதிக்கும் முன் ‘எப்படி’ சேவல் கூவுகிறது?

ஒவ்வொரு உயிரனத்திற்கும் அதன் உடலில் உயிரியல் கடிகாரம் என்பது இருக்கும். சேவலுக்கு அது மனிதர்களை விட வேகமாக இருக்கும். அதே நேரத்தில் அதன் உயிரியல் கடிகாரம் வேகமாக சூழலும் என்ற காரணத்தால், கோழிகளுக்கு ஒளியைக் கண்டறியும் திறன் அதிகம். அதனால்தான் சூரியன் உதிக்கும் போது சூரியனின் கதிர்களைக் கண்டறிகின்றன. சூரிய உதயத்தை உணரும் கோழி, மீதமுள்ள கோழிகளை எழுப்ப கூவுகிறது. SHARE IT.
Similar News
News December 5, 2025
1975-ல் டாலருக்கு நிகரான ₹ மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத அளவுக்கு ₹90.43 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. 1975-ல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹8.97 ஆக இருந்துள்ளது. 2010-ல் ரூபாயின் மதிப்பு ₹44.64 ஆக இருந்த நிலையில், அடுத்த 15 வருடங்களில் அது இரட்டிப்பாகி தற்போது ₹90.05 ஆக உள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம், அமெரிக்க-இந்திய வர்த்தக உறவில் பிரச்னை ஆகியவை இதற்கான காரணங்களாக உள்ளன.
News December 5, 2025
Cinema 360°: ரீ-ரிலீசாகும் ரஜினியின் ‘படையப்பா’

*ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ‘படையப்பா’ ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் *ஆதி நடித்துள்ள ‘DRIVE’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது *ரீ-ரிலீசில் அஜித்தின் ‘அட்டகாசம்’ ₹98 லட்சம் வசூல் செய்துள்ளது *அஷ்வின் குமாரின் ‘தூள்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்’ சீரிஸ் இன்று முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது *கார்த்தியின் ‘வா வாத்தியார்’ இசைவெளியீட்டு விழா டிச.6-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது
News December 5, 2025
விவேகானந்தர் பொன்மொழிகள்!

*பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும் *பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது *உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது * எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்


