News April 7, 2025
நீங்க இப்படியா தூங்குறீங்க… இத பாருங்க

போரடித்தால் குப்புறப்படுத்து கிடப்பது (அ) அப்படியே தூங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. இது நல்லதல்ல என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். ஆம், நீண்டநேரம் குப்புறப்படுத்துக் கிடந்தால் முதுகு, கழுத்து & தோள்பட்டைகளில் வலி ஏற்படுமாம். முகத்தில் சுருக்கங்களும் ஏற்படலாம். குறிப்பாக கர்ப்பிணிகள் இப்படி தூங்கக் கூடாதாம். மல்லாந்து படுத்துத் தூங்குவது தான் சிறந்ததாம். இந்த முக்கிய தகவலை SHARE பண்ணுங்க
Similar News
News November 15, 2025
5000 ஆண்டுகள் வரலாறு.. இந்த நாடுகள் இவ்வளவு பழசா!

உலகில் பல்வேறு நாகரிகங்கள் தோன்றி மறைந்துவிட்டன. பல நகரங்கள் எழுச்சி அடைந்து, இருந்த இடமே தெரியாமல் வீழ்ச்சியும் அடைந்துவிட்டன. ஆனால், சில நாடுகள் அனைத்தையும் கடந்து, இன்றும் மனித இனத்தின் ஆணிவேராக இருந்து வருகின்றன. அப்படி உலகின் மிக பழமையான நாடுகளின் பட்டியலை கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து எந்த நாடு மிகவும் பழமையானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
News November 15, 2025
தேவநாதன் அதிரடியாக கைது

பணமோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். முதலீட்டாளர்களிடம் ₹500 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் ₹100 கோடி நிபந்தனை தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு சென்னை கோர்ட் ஜாமீன் வழங்கியது. ஆனால், அந்த நிபந்தனையை நிறைவேற்ற தவறியதால் அவரை கைது செய்ய 2 நாள்களுக்கு முன் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சென்னை கோர்ட்டில் ஆஜரான நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.
News November 15, 2025
ரயில் விபத்துக்களை தடுக்க நவீன தொழில்நுட்பம்

2035-க்குள் அனைத்து ரயில்வே வழித்தடங்களிலும் ‘கவச்’ தொழில்நுட்பத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5,900 கிமீ வரை ‘கவச்’ பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ரயில் எஞ்சின், தண்டவாளம், சிக்னலை இணைத்து இத்தொழில்நுட்பம் உருவாக்கப்படுகிறது. ஒரே தடத்தில் 2 ரயில்கள் வந்தால், தானாகவே பிரேக் பிடித்து ரயிலின் வேகத்தை குறைக்கும். அதேபோல், நிர்ணயித்த வேகத்தை விட அதிகமாக இயங்க அனுமதிக்காது.


