News May 1, 2024

சிசிடிவி கேமராக்கள் ஒரே நேரத்தில் பழுதானது எப்படி?

image

தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் 93 சிசிடிவி கேமராக்களும் ஒரே நேரத்தில் பழுதானது எப்படி என பு.த.க தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “யு.எஸ்.பி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில், நேற்று சிசிடிவி கேமராக்கள் 5 மணிநேரம் இயங்கவில்லை. இது முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து சத்யசாகு ஆய்வு செய்து, உண்மையை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

Similar News

News February 21, 2026

சுவாசக் கோளாறுகளை குணப்படுத்தும் கசாயம்!

image

சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடவும், சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் பெறவும் புதினா கசாயம் உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ➤தேவையானவை: புதினா, மிளகுத்தூள், உப்பு ➤செய்முறை: புதினாவை கிள்ளி போட்டு, தண்ணீரில் 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின்னர் அதை வடிகட்டி, இறக்கி உப்பு, மிளகு தூள் கலந்தால் புதினா கசாயம் தயார். அனைவருக்கும் இச்செய்தியை பகிரவும்.

News February 21, 2026

மகளிருக்கு ₹2,000.. வீடு தேடி அதிகாரிகள் வருகின்றனர்

image

மகளிர் உரிமைத்தொகைக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் புதிதாக விண்ணப்பித்து, பின்னர் மேல்முறையீடு செய்தவர்களின் மனுக்களின் பரிசீலனை தொடங்கியுள்ளது. ரேஷன் கார்டு, ஆதார், மின் இணைப்பு எண் மற்றும் அரசின் விதிமுறைக்கு உள்பட்டு அவர்கள் தகுதியானவர்களா என்பதும் ஆராயப்பட்டு வருகின்றன. 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னர் பல லட்சம் பேர் இத்திட்டத்தில் இணைய வாய்ப்புள்ளதாம்.

News February 21, 2026

சத்தான்கள் வேதம் ஓதக் கூடாது: அன்புமணி

image

வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டிவிட்டு சமூகநீதி வேடம் போடுவதாக CM ஸ்டாலினை அன்புமணி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களுக்கான <<19180474>>இட ஒதுக்கீடு<<>> செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய அவர், சாத்தான்கள் வேதம் ஓதுவதற்கு ஒப்பானது இது என சாடியுள்ளார். TN-ல் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு செய்த துரோகத்தை CM நினைத்து பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!