News September 15, 2024

விண்வெளி வீரர்கள் எப்படி வாக்களிப்பார்கள்?

image

விண்வெளியில் வீரர்கள் வாக்களிக்க அமெரிக்க அரசு வழிவகை செய்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் விண்வெளி வீரர்களுக்கான <<14104028>>வாக்குச்சீட்டை<<>> நாசாவுடன் சேர்ந்து PDF வடிவத்தில் அனுப்புவர். வீரர்கள் தங்கள் விருப்பமான வேட்பாளரை கிளிக் செய்து நாசாவுக்கு திருப்பி அனுப்புவர். ரகசிய வாக்கெடுப்பை உறுதி செய்ய PDF பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்படும். 1997இல் டேவிட் வுல்ஃப் முதன்முறையாக விண்வெளியில் இருந்து வாக்களித்தார்.

Similar News

News December 23, 2025

ஒரு ATM-க்குள் எவ்வளவு பணம் இருக்கும்னு தெரியுமா?

image

நம் பணத்தேவையை எளிதில் தீர்த்து வைக்கும் இயந்திரமான ATM-க்குள் ‘கேஷ் கேசட்’ எனப்படும் 4 பெட்டிகள் இருக்கும். ஒரு பெட்டியில் சுமார் 2,500 நோட்டுகள் வீதம், மொத்தம் 10,000 நோட்டுகள் வரை அடுக்க முடியும். பெட்டிகள் முழுவதும் ₹500 நோட்டுகளால் நிரப்பப்பட்டால், ₹40 லட்சம் வரை இருக்கும். ஆனால், ₹100, ₹200 என பல வகை நோட்டுகள் வைக்கப்படுவதால், சராசரியாக ₹30 லட்சம் வரை பணம் நிரப்பப்படுவதாக கூறப்படுகிறது.

News December 23, 2025

நிறைவேறாத SAC-ன் ஆசை.. End Card போட்ட விஜய்!

image

விஜய் சினிமாவில் இவ்வளவு பெரிய உச்சத்தை அடைய SAC-யும் முக்கிய காரணமே. அவருக்கு, வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். சிறை படத்தின் நிகழ்ச்சியில் பேசிய அவர், வெற்றிமாறனுக்கும் அந்த ஆசை இருந்திருக்கலாம் என குறிப்பிட்டார். ஆனால், விஜய், SAC-ன் ஆசைக்கு End Card போட்டுவிட்டாரே. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்.. எப்படி இருந்திருக்கும்?

News December 23, 2025

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

image

பிற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை திமுகவுக்கு அழைத்து வரும் பணிகளை செய்துவருகிறார் செந்தில்பாலாஜி. இந்நிலையில், அவர் முன்னிலையில் மோகனூர் மேற்கு (நாமக்கல்) ஒன்றிய அதிமுக துணைச் செயலாளராக இருந்த R.V.R.செந்தில் குமார் திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் சேர்ந்து, பரமத்தி ஒன்றிய அதிமுக வர்த்தக அணிச் செயலாளர் கிருஷ்ணசாமி உள்பட பலர், அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

error: Content is protected !!