News March 18, 2025

விண்வெளியில் 9 மாதங்கள் சிக்கியது எப்படி?

image

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, கடந்த 2024 ஜூனில் <<15799391>>சுனிதா வில்லியம்ஸ்<<>>, புட்ச் வில்மோர் சென்றனர். ஆராய்ச்சியை முடித்துவிட்டு 8 நாள்களில் பூமிக்கு திரும்ப வேண்டியவர்கள், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி நிலையத்திலேயே தங்க நேர்ந்தது. அவர்களை மீட்க அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளும் சிக்கலில் முடிந்ததால், 9 மாதங்கள் அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Similar News

News March 18, 2025

நம்பர் சேமிக்காமல் வாட்ஸ்அப் கால் பண்ண முடியுமா?

image

கான்டாக்டில் நம்பரை சேமிக்காமலேயே வாட்ஸ்அப்பில் கால் செய்ய முடியும். அது எப்படி எனத் தெரிந்து கொள்வோம். வாட்ஸ்அப்பில் CALL பகுதிக்கு சென்று + என்பதை அழுத்த வேண்டும். இதையடுத்து, அங்கு திரையில் வரும் Call a Number என்பதை கிளிக் செய்தால், டயல் பேட் தோன்றும். இப்போது அதில் உங்களுக்கு தேவைப்படும் நம்பரை கொடுத்து டயல் செய்து பேசலாம். நம்பரை சேமிக்க வேண்டியதில்லை.

News March 18, 2025

ஐபிஎல்: அதிக ரன், அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் யார்?

image

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் யார் என பார்க்கலாம். ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி, 17 சீசன்களிலும் ஒரே அணிக்காக 252 போட்டிகள் விளையாடி 8,004 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 8 சதங்கள், 55 அரைசதங்களும் அடங்கும். இதுவே ஒரு வீரரின் அதிகபட்ச ரன்கள் ஆகும். மும்பை, ஆர்ஆர், ஆர்சிபி அணிகளுக்காக 160 போட்டிகள் சாஹல் விளையாடி 205 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

News March 18, 2025

உயர்ந்த மனிதர் காலமானார்!

image

உலகின் உயரமான மனிதர்களில் ஒருவரான பாகிஸ்தானை சேர்ந்த நசீர் சூம்ரோ (55), உடல்நலக்குறைவால் காலமானார். சிந்து மாகாணத்தை சேர்ந்தவரான நசீர், 7 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர். சராசரி மனிதர்களை விட இவர் 3 அடி உயரம் கொண்டவர். நுரையீரல் நோயாலும், உடல் இணைப்பு பகுதிகளில் வலியாலும் பல ஆண்டுகளாக அவதியுற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். பாகிஸ்தானின் அடையாளமாக உலகம் முழுவதும் வலம் வந்தவர் சூம்ரோ.

error: Content is protected !!