News December 25, 2024
அண்ணா பல்கலையில் இது நடந்தது எப்படி?

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை நடைபெற்றது எப்படி என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் மக்கள் முன்வைத்து வருகின்றனர். தலைநகர் சென்னையின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இப்பல்கலைக்கழகத்திற்குள் வெளியாட்கள் யாரும் எளிதில் நுழைந்துவிட முடியாது. அருகே ஆளுநர் மாளிகை, ஐஐடி ஆகியவை இருந்தும்கூட பாதுகாப்பில் ஓட்டை ஏற்பட்டிருக்கிறது. இதில், யார் மீது குற்றம்?
Similar News
News July 8, 2025
திருப்புவனம் போல் மற்றுமொரு தாக்குதல் நடத்திய போலீஸ்

திருப்புவனம் அஜித் மீது போலீஸ் தாக்குதல் சம்பவம் இன்னும் தணியாத நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. கோவில் இடத்தில் வீடு கட்டுவதற்கு பொன்ராஜ் என்பவர் ஈடுபட்டுள்ளார். இதனை தங்கபாண்டி என்பவர் எதிர்த்துள்ளார். விவகாரம் காவல் நிலையம் சென்றதால், வேடசந்தூர் போலீசார் தங்கப்பாண்டி வீட்டிற்கே சென்று அவருடைய மனைவி, மகனை கடுமையாக தாக்கியுள்ளார்கள்.
News July 8, 2025
அம்பேத்கர் பொன்மொழிகள்

*நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை. * ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின். *சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.
News July 8, 2025
திமுக கூட்டணியில் தேமுதிக?

2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மாநிலங்களவை எம்.பி பதவியை அதிமுக தராததால் அதிருப்தியில் தேமுதிக இருப்பதாகவும், ஆகையால் கட்சியின் எதிர்காலம் கருதி திமுக கூட்டணியில் இடம்பெற பேச்சுகள் நடைபெறுவதாக தகவல்கள் உள்ளன. அதேசமயம் 5 சட்டமன்ற தொகுதிகளை தேமுதிக கேட்பதாகவும், அதனை தருவதற்கு திமுக தலைமையும் தயாராக இல்லை என கூறப்படுகிறது.