News November 24, 2024
4 மாதங்களில் முடிவு மாறியது எப்படி?

ஏக்நாத் ஷிண்டே இனி பட்னாவிஸ் கீழ்தான் பணிபுரிய வேண்டியிருக்கும் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இது குறித்து பேசிய அவர், தேர்தல் முடிவுகளை நம்ப முடியவில்லை என்றார். லோக்சபா தேர்தலில் குறைந்த இடங்களில் வென்ற ஆளும் கூட்டணி, 4 மாதங்களில் எப்படி வெற்றி பெற முடிந்தது என கேள்வி எழுப்பினார்.
Similar News
News September 4, 2025
இனி வீடு கட்டும் செலவு குறையும்

ஜிஎஸ்டி வரி குறைப்பால் புதிதாக வீடு கட்டுவோர் பெரிதும் பயனடைவர் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சிமெண்ட், கிரானைட், மார்பிள், செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி, 12% இருந்து 5% ஆகவும், 28% இருந்து 18% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கட்டுமான செலவில் 5% வரை குறையும். இதனால், மக்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும்.
News September 4, 2025
சிறுநீரகத்தை வலிமையாக்க வேண்டுமா?

நம் உடலில் உள்ள கழிவுகள், நச்சுகளை அகற்றுவதில் சிறுநீரகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. சிறுநீரகங்களின் திறனை அதிகரித்து, அவற்றை வலிமையாக்க நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். அன்னாசிப்பழம், குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி, காளான், முட்டைக்கோஸ், ஆப்பிள், சிவப்பு திராட்சை, முட்டை ஆகிய உணவுகள் இதற்கு உதவும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது உங்கள் சிறுநீரகங்களை பாதுகாக்க உதவும்.
News September 4, 2025
சற்றுமுன்: அமைச்சர் துரைமுருகன் கைதாகிறாரா?

<<17612464>>சொத்து குவிப்பு வழக்கில்<<>> நேரில் ஆஜராகாத அமைச்சர் துரைமுருகனை கைது செய்ய சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். குறிப்பாக, CM ஸ்டாலின், வெளிநாட்டில் இருப்பதால் அவருடன் தொலைபேசி வாயிலாக DCM உதயநிதி, சட்ட வல்லுநர்கள் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மூத்த அமைச்சரான துரைமுருகன் கைது செய்யப்படுவாரோ என்ற பேச்சு எழுந்துள்ளது.