News May 24, 2024
ஐஸ்வர்யா ராயின் கை எப்படி உடைந்தது?

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரான்சில் நடந்த கான் திரைப்பட விழாவில் பெரிய கட்டுடன் காணப்பட்டார். இதனால் ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆனது. எப்படிக் காயம் ஏற்பட்டது என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். தற்போது அதற்கு விடை கிடைத்து இருக்கிறது. கடந்த 11 ஆம் தேதி மும்பை வீட்டிலிருந்தபோது எதிர்பாராத விதமாகத் தடுக்கி விழுந்த நடிகை ஐஸ்வர்யா ராயின் இடது கை உடைந்துவிட்டதாம்.
Similar News
News March 6, 2026
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம்.. நயன்தாரா வாழ்த்து REWIND

விஜய் – த்ரிஷா சர்ச்சை SM-ல் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. இதனிடையே, த்ரிஷாவின் நிச்சயதார்த்தத்திற்கு நயன்தாரா வாழ்த்து தெரிவித்த பழைய பதிவு SM-ல் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், த்ரிஷா, வருண் ஆகியோருக்கு வாழ்த்துகள் என நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். 2015-ம் ஆண்டு வருண் என்பவருடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணம் நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.
News March 6, 2026
வாயைச் சுற்றி கருப்பா இருக்குதா? TIPS

வாயை சுற்றி கருப்பாக இருப்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறதா? இதனை ஈசியா சரி செய்யலாம். எலுமிச்சை பழத்தை வெட்டி 2 நிமிடங்கள் வாயைச் சுற்றி தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், இறந்த செல்கள் நீங்கி சருமத்தில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கருமையை நீக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த TIPS பலருக்கும் உதவும் என்பதால் SHARE பண்ணுங்க.
News March 6, 2026
ராமதாஸ் வேட்பாளர் மீது அன்புமணி தரப்பு தாக்குதலா?

எதிரும் புதிருமாக இருக்கும் அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்புகள் அடிதடி மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பில் <<19310925>>சாமிநாதன் <<>>என்பவர் களமிறக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அன்புமணி தரப்பு அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ரத்த காயங்களுடன் டிஜிபி அலுவலகத்தில் சாமிநாதன் புகார் அளித்துள்ளார்.


