News September 29, 2025
கரூரில் 41 பேர் உயிரிழந்தது எப்படி? Postmortem Report

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் உடற்கூராய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், 25 பேர் 2 – 3 நிமிடங்கள் வரை மூச்சுத் திணறல் ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கியதில் மிதிபட்டு விலா எலும்புகள் முறிந்து பலியானது மருத்துவ அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. கூட்டமான இடங்களுக்கு செல்வோர் எப்போதும் ஜாக்கிரதையாகவே இருங்கள். SHARE IT.
Similar News
News September 29, 2025
₹95,948 கோடிக்கு செல்போன் ஏற்றுமதி: சாதிக்கும் சென்னை!

இந்திய அளவிலான செல்போன் உற்பத்தியில் சென்னை முதலிடத்தில் உள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் செல்போன் உற்பத்தியில் சென்னையின் பங்களிப்பு மட்டும் 45.68% ஆகும். அடுத்தடுத்த இடங்களில் கோலார், டெல்லி NCR, அகமதாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. சென்னையில் உற்பத்தி செய்யப்பட்ட செல்போன்களின் ஏற்றுமதி மதிப்பு ₹95,948 கோடி ஆகும். இந்த தகவலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
News September 29, 2025
விலையை பார்த்தாலே தலை சுற்றுது! நீங்களே பாருங்க

பல நாடுகளில் மது என்பது அதன் பாரம்பரியத்தில் ஒன்றாக உள்ளது. உலகில் பல வகையான மதுபானங்கள் உள்ள நிலையில், சில மதுபானங்களின் விலையை பார்த்தாலே தலை சுற்றுது. அவற்றை மேலே, போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த மதுபானங்களில் அப்படி என்னதான் இருக்கும். ஏன் இவ்வளவு விலை? உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News September 29, 2025
VIRAL: உங்க ஆபீசில் லீவு கேட்டா என்ன சொல்வாங்க?

அவசரத்துக்கு லீவு கேட்கும் பணியாளர்களை அவமானப்படுத்தும் யூகோ வங்கி அதிகாரி பேச்சுக்கு SM-ல் கண்டனம் எழுந்துள்ளது. Zonal Head ஆக உள்ள அந்நபர், தாய் இறந்ததற்கு லீவு கேட்டவரிடம், ‘எல்லோரின் தாயாரும் இறக்க தான் போகிறார்கள். ரொம்ப நடிக்காதே’ என்றும், குழந்தை ICU-வில் உள்ளது என்றவரிடம் ‘நீ என்ன டாக்டரா? உடனே வேலைக்கு வரலைனா லாஸ் ஆப் பே போட்ருவேன்’ எனவும் பதிலளித்ததாக தெரிகிறது. உங்க மேலதிகாரி எப்படி?