News October 2, 2025
ஆனந்த் மீது மட்டும் எப்படி வழக்கு? திருமா

விஜய், ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு போட முகாந்திரம் இல்லை எனில், ஆனந்த் மீதான வழக்கில் எப்படி முகாந்திரம் இருக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் மீது வழக்குப் பதியாவிட்டால், N.ஆனந்த் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனக் கூறிய அவர், கரூர் துயரத்திற்கு விஜய் கவலைப்பட்டதாக தெரியவில்லை என சாடினார்.
Similar News
News October 2, 2025
இந்தியாவில் அதிவேக 50 விக்கெட்கள்.. பும்ரா சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் அதிவேகமாக 50 விக்கெட்கள் வீழ்த்தி பும்ரா அசத்தியுள்ளார். வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்று ஜோஹன் லேனை கிளீன் போல்டு செய்த அவர், 24 இன்னிங்ஸில் 50 விக்கெட்கள் வீழ்த்தி EX-வீரர் ஜவகல் ஸ்ரீநாத்தின் சாதனையை சமன் செய்துள்ளார். மேலும், இந்திய மண்ணில் குறைவான பந்துகளில் (1747) 50 விக்கெட்கள் வீழ்த்தியவர் என்ற பெருமையும் அவரை சேர்ந்துள்ளது.
News October 2, 2025
பாஜகவின் பிடியில் விஜய் இல்லை: நயினார் நாகேந்திரன்

தவெக நிர்வாகிகள் கேட்ட இடத்தில் மாவட்ட நிர்வாகம் ஏன் அனுமதி வழங்கவில்லை என்பது உள்பட பல கேள்விகளை திமுக அரசை நோக்கி நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ளார். பாஜகவின் பிடியில் விஜய் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர், பாஜகவை தன் கொள்கை எதிரி என விஜய் சொல்லும்போது, அவர் எப்படி தங்கள் பிடியில் இருப்பார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 2, 2025
கால்சியம் குறைபாடு இருக்கா? இதை சாப்பிடுங்க!

உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால், எலும்பு பலவீனமாவது தொடங்கி, சத்துகளை உடல் கிரகிக்க முடியாத பிரச்னை வரை ஏற்படலாம். குறிப்பாக பெண்கள், வளரும் பிள்ளைகளை கால்சியம் சத்து குறைபாடு அதிகம் பாதிக்கும். இதை தவிர்க்க கால்சியம் நிறைந்த உணவுகளை தினசரி உட்கொள்ள வேண்டும். மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து அவற்றை தெரிந்துகொள்ளுங்கள். இதில் இல்லாத கால்சியம் நிறைந்த உணவு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.