News October 15, 2025

பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்படுவது எப்படி?

image

சாதாரண பட்டாசுகளோடு ஒப்பிடும்போது, பசுமை பட்டாசுகள் குறைந்த மாசுபாட்டை உண்டாகும் மூலப்பொருட்களை வைத்தே தயாரிக்கப்படுகிறது. சாதாரண பட்டாசுகளில் ஆர்செனிக், லித்தியம், பேரியத்தின் அளவு அதிகமாக இருப்பதால் புகையும் அதிகமாக வெளியாகும். ஆனால், பசுமை பட்டாசுகளில் அலுமினியம், லெட், கார்பன் ஆகிய மூல பொருட்கள் குறைந்த அளவில் சேர்க்கப்படுகிறது. எனவே புகையும் குறைவாக இருக்கும்.

Similar News

News October 15, 2025

கோலி, ரோஹித்துக்கு இதுதான் கடைசி தொடரா?

image

விராட் கோலி, ரோஹித் சர்மா ஒன்றாக விளையாடுவதை, ஆஸி ரசிகர்கள் பார்ப்பது இதுவே கடைசிமுறையாக இருக்கலாம் என பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஆஸி., தொடருடன் இருவரும் ஓய்வை அறிவிப்பார்கள் என ஒரு கருத்து நிலவி வருகிறது. இதற்கு வலுசேர்க்கும் வகையில் கம்மின்ஸின் பேச்சு அமைந்துள்ளது. இந்த தொடரில் ஒருவேளை இருவரும் சொதப்பினால், இந்திய அணியில் அவர்கள் தொடர்வது கடினம் என்பது தெளிவாக தெரிகிறது.

News October 15, 2025

3,000 பேருக்கு வேலை: Hitachi நிறுவனத்துடன் ஒப்பந்தம்

image

5 வருடங்களில், ₹2,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. CM ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹிட்டாச்சி நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை, கடந்த 2023-ம் ஆண்டு சென்னை போரூரில் CM ஸ்டாலின் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

News October 15, 2025

Cinema Roundup: ₹35 கோடி லாபம் ஈட்டிய ‘டியூட்’

image

*இளையராஜாவின் ஒரு பாடலை பயன்படுத்த ₹20 லட்சம் வரை சோனியிடம் கொடுத்ததாக ‘குட் பேட் அக்லி’ படக்குழு தகவல். *சமுத்திரக்கனியின் ‘தக்‌ஷா’ படம் அக்.17 முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. *வெளியீட்டுக்கு முன்பே டிவி ஒளிபரப்பு, ஓடிடி உரிமம் மூலம் ‘டியூட்’ ₹35 கோடி லாபம் ஈட்டியதாக அறிவிப்பு. *விஜய் ஆண்டனியின் ‘சக்தி திருமகன்’ அக்.24-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

error: Content is protected !!