News January 14, 2025
பொங்கலுக்கு வெளியான 3 படங்கள் எப்படி?

காதலிக்க நேரமில்லை: காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் சில இடங்களில் கிளாப்ஸ் பெறுகிறது. ஏ சென்டர் ஆடியன்ஸ் படமோ என தோன்றுகிறது. நேசிப்பாயா: ஸ்டைலாக எடுக்கப்பட்ட கொஞ்சம் பழைய காதல் கலந்த திரில்லர் படம். கிளைமாக்ஸ் டிவிஸ்ட் நன்றாக உள்ளது. தருணம்: கொலை ஒன்றில் நாயகனும், நாயகியும் எப்படி தப்பிக்கிறார்கள் என்ற திரில்லர் கதை. சில இடங்களில் கைதட்டலை அள்ளுகிறது. உங்க சாய்ஸ் எது?
Similar News
News April 26, 2025
சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் பாயும்: பாக். Ex அமைச்சர்

சிந்து நதி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ பேசியது சர்ச்சையாகியுள்ளது. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்து நதி ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்தது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிலாவல் பூட்டோ, ‘சிந்து நதி நம்முடையது. நமக்கான நீர் இந்த நதியில் பாயும். இல்லையென்றால், அவர்களின் (இந்தியர்கள்) ரத்தம் பாயும்’ எனத் தெரிவித்துள்ளார்.
News April 26, 2025
ஏப்ரல் 26: வரலாற்றில் இன்று

▶ 1897 – தமிழ்தாய் வாழ்த்து பாடல் கொடுத்த பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் நினைவு நாள். ▶ 1970 – நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள். ▶ 1973 – நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி பிறந்த நாள். ▶ 1989 – வங்கதேசத்தில் சூறாவளிக் காற்றால் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு. ▶ 1994 – ஜப்பானில் சீன விமானம் விபத்துக்குள்ளானதில் 264 பேர் உயிரிழப்பு.
News April 26, 2025
CSK செய்த மோசமான சாதனை..!

ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்த CSK-க்கு இந்த ஆண்டு சோதனை காலம்தான். சேப்பாக்கம் மைதானத்திலேயே மோசமான சாதனையை பதிவு செய்திருக்கிறது அந்த அணி. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே சேப்பாக்கத்தில் தொடர்ந்து 4 போட்டிகளில் CSK தோற்றதில்லை. ஆனால், இந்த ஆண்டு RCB, DC, KKR, SRH என 4 அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் என்னெல்லாம் பார்க்கப் போறோமோ?