News October 11, 2025
₹4,577 கோடிக்கு சென்னையில் வீடுகள் விற்பனை

CRE MATRIX தகவலின்படி ₹1-₹2 கோடி மதிப்பிலான வீடுகள் விற்பனையில் ஹைதராபாத் முதலிடத்தில் உள்ளது. 2025-ல் இதுவரை ஹைதராபாத்தில் 15,152 வீடுகள் ₹21,448 கோடிக்கு விற்பனையாகியுள்ளன. 2-ம் இடத்தில் உள்ள பெங்களூருவில் 14,617 வீடுகள் ₹20,695 கோடிக்கு விற்றுள்ளன. அடுத்தடுத்த இடங்களில் மும்பை, புனே, அஹமதாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. 6-வது இடத்தில் உள்ள சென்னையில் 3,401 வீடுகள் ₹4,577 கோடிக்கு விற்பனையாகியுள்ளன.
Similar News
News October 11, 2025
தகுதி இல்லாதவர்களுக்கு நோபல் பரிசு: புடின்

நோபல் பரிசு மீதான நம்பகத்தன்மை போய்விட்டதாக புடின் தெரிவித்துள்ளார். உலகிற்கு ஒன்றுமே செய்யாத நபர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் தகுதியானவரா என தீர்ப்பளிக்கும் உரிமை தனக்கு இல்லை, ஆனால் அவர் உலகில் அமைதியை வளர்க்க முயற்சி மேற்கொண்டதாகவும், பல சிக்கலான விஷயங்களை தீர்த்து வைத்திருப்பதாகவும் புடின் பேசியுள்ளார்.
News October 11, 2025
அக்டோபர் 11: வரலாற்றில் இன்று

*1811–முதலாவது நீராவிப் படகுக் கப்பல் சேவை நியூயார்க், ஹோபோகன் இடையே தொடக்கம். *1826 – எழுத்தாளர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தநாள். *1902–அரசியல்வாதி ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்தநாள். *1942–நடிகர் அமிதாப் பச்சன் பிறந்தநாள். *1984–நடிகர் நிவின் பாலி பிறந்தநாள். *1987-விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை ஆபரேஷன் பவான் நடவடிக்கையை தொடங்கியது.
News October 11, 2025
காங்கிரஸ் கட்சி தேய்ந்து கொண்டிருக்கிறது: EPS

பல கட்சிகளுக்கு சென்று வந்தவரை மாநில தலைவராக்கி இருப்பதால் தான் காங்கிரஸ் கட்சி தேய்ந்து கொண்டிருப்பதாக EPS விமர்சித்துள்ளார். விசுவாசமாக உழைத்தவர்களுக்கு எல்லாம் காங்கிரஸில் இடமில்லை என்றும் திமுகவுக்கு ஜால்ரா அடிப்பவரே மாநில தலைவர் பதவிக்கு வர முடிகிறதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அதிமுக பாஜக கூட்டணியை கண்டு திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பதறுவது ஏன் என EPS கேள்வி எழுப்பியுள்ளார்.