News June 27, 2024

ஓசூர் முதல் பெங்களூரு வரை

image

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்மூலம் பெங்களூரு செல்வோர் ஓசூர் விமான நிலையத்திற்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. பெங்களூருவின் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம், நகருக்கு வடக்கே வெகு தொலைவில் இருப்பதால் தெற்கு பகுதிக்கு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. அவற்றை ஓசூர் விமான நிலையம் சீர் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 23, 2026

வியாழக்கிழமை பள்ளிகள் விடுமுறை

image

புதுச்சேரி பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்.9-ல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் புதுவையில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் துறை அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளித்து அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒருவேளை விதிகளை மீறி செயல்பட்டால் 1950 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்.

News March 23, 2026

அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்?

image

TN-ல் NDA கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ADMK 170+ தொகுதிகளில் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. BJP-27, PMK-18, AMMK-11 தொகுதிகளில் களமிறங்குகின்றன. இதர கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடப்பதாகவும் EPS கூறியுள்ளார். 2021 உடன் ஒப்பிடுகையில் பாஜக கூடுதலாக 7 தொகுதிகளை பெற்றுள்ளது. 2021-ல் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக இம்முறை 5 இடங்கள் குறைவாக 18 தொகுதிகளில் களம்காண்கிறது.

News March 23, 2026

பாமகவின் மாம்பழம் ஜூஸ் ஆகிவிடக்கூடாது: SC கருத்து

image

பாமக சின்னம் தொடர்பான வழக்கு இன்று SC-யில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சிக்குள் பிரச்னை ஏற்பட்டால் சின்னத்தை முடக்கி வைப்பதே நடைமுறை என ராமதாஸ் தரப்பு முன்வைத்தது. ஆனால், ECI-யிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் சின்னம் தங்களுக்கே சொந்தம் என அன்புமணி தரப்பு வாதிட்டது. இதனையடுத்து, நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தில் கட்சி சின்னமான மாம்பழம் ஜூஸ் ஆகிவிடக்கூடாது என CJI சூர்ய காந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!