News April 25, 2024

மருத்துவமனைகள், மருந்துகள் தயார்

image

வெப்பம் சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்தத் தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சை வழங்குவதற்காக மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கோடை வெயிலிலிருந்து மக்கள், வனவிலங்குகளை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள அவர், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர்ப் பந்தல்களை அமைக்க உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News September 20, 2025

சவுதிக்கு அணுசக்தி திறனை வழங்கும் பாகிஸ்தான்

image

பாகிஸ்தான் – சவுதி இடையே சமீபத்தில் பரஸ்பர ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் அடிப்படையில் சவுதிக்கு அணுசக்தி திறன்களை வழங்குவோம் என பாக்., பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது தெரிவித்துள்ளார். மேலும், பிற அரபு நாடுகளுக்கும் இந்த ஒப்பந்தத்திற்கான கதவு மூடப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இஸ்லாமிய நாடுகளிலேயே பாகிஸ்தானிடம் மட்டும் தான் அணு ஆயுதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

News September 20, 2025

கதை கூட சொல்ல வேண்டாம் நடிக்க ரெடி: அர்ஜுன் தாஸ்

image

கைதி, மாஸ்டர் படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த அர்ஜுன் தாஸ், தற்போது தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால், லோகேஷ் கனகராஜ் கூப்பிட்டால் எந்த கேரக்டரிலும் நடிக்க தயார் என்று தெரிவித்துள்ளார். லோகேஷ் தனக்கு கதை கூட சொல்ல வேண்டிய தேவையில்லை எனவும், சினிமாவில் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் என்பதால், கண்ணை மூடிக்கொண்டு கேள்வி கேட்காமல் நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

News September 20, 2025

செப்டம்பர் 20: வரலாற்றில் இன்று

image

*1857 – கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விஸ்வாசமான படைகள் டெல்லியைக் கைப்பற்றின. முதல் இந்திய சுதந்திர போர் முடிவுக்கு வந்தது. *1878 – தி இந்து செய்தி நிறுவனம் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது. *1971- தமிழ் திரைப்பட இயக்குநர் மிஷ்கின் பிறந்தநாள். *1990 – இலங்கை சவுக்கடி கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 தமிழர்கள் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டனர்.

error: Content is protected !!