News October 19, 2024
WeekEnd-ல் பார்க்க வேண்டிய Horror படங்கள்

திகிலூட்டும் காட்சிகளால் உலகளவில் ஃபேமஸ் ஆன Horror படங்கள் OTT தளங்களில் குவிந்து கிடக்கின்றன. ‘Conjuring’, ‘Saw’ படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் வானின் படுபயங்கர படமான ‘Insidious’-ஐ அமேசான் பிரைமில் காணலாம். ‘Jhon Wick’ நாயகன் கியானு ரீவ்ஸ் நடித்த ஹாரர் + ஆக்ஷன் படமான ‘Constantine’ நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கிடைக்கிறது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் + ஹாரர் படமான ‘Hereditary’-ஐ அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
Similar News
News August 21, 2025
பாஜகவுடன் கூட்டணி ஏன்? இபிஎஸ் விளக்கம்

அதிமுகவை பொறுத்தவரை கொள்கை நிலையானது என்றும், ஆனால் கூட்டணி சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலுக்காக அமைக்கப்படுவது என இபிஎஸ் தெரிவித்துள்ளார். மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு, அதே சமயம் ஊழல் நிறைந்த திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது பாஜக நிலைப்பாடு என்று கூறினார். இருவருக்கும் ஒத்த கருத்து திமுகவை அகற்றுவது அதனால்தான் கூட்டணி சேர்ந்திருப்பதாக கூறினார்.
News August 21, 2025
ஆகஸ்ட் 21: வரலாற்றில் இன்று

*1986 – பிரபல தடகள வீரர் உசேன் போல்ட் பிறந்ததினம்.
*1778 – அமெரிக்கப் புரட்சிப் போரின் போது, பிரிட்டிஷ் படைகள் பிரெஞ்சு குடியேற்றமான பாண்டிச்சேரியை முற்றுகையிட்டன.
*1907 – தோழர் ப.ஜீவானந்தம் பிறந்ததினம்.
*1963 – திரைப்பட நடிகை ராதிகா பிறந்ததினம்.
* 1988 – நேபாள-இந்திய எல்லைப்பகுதியில் 6.9 அளவில் நிலநடுக்கம். இதில் 1,450 பேர் உயிரிழந்தனர்.
News August 21, 2025
டெல்லி விரைந்தார் கவர்னர் ஆர்.என்.ரவி

கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். வரும் ஆக.23-ம் தேதி வரை அவர் அங்கிருக்க உள்ளார். ஆளுநரின் பயணம் திட்டமிட்டது என்றும், டெல்லியில் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் கவர்னர் அடுத்தடுத்த நாட்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட மத்திய அமைச்சர்கள் சிலரை சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.