News April 1, 2025

கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி

image

செங்கல்பட்டு அருகே கார் மீது கனரக லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், குழந்தை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த கனரக லாரி மோதியதே விபத்துக்கு காரணம்.

Similar News

News April 2, 2025

பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியல்: இந்தியா 3ம் இடம்

image

பெரும் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது. போர்ப்ஸின் பட்டியலில் 902 பெரும் கோடீஸ்வரர்களுடன் USA முதலிடத்தில் உள்ளது. 902 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.581 லட்சம் கோடி. இதையடுத்து, சீனா 450 பேருடன் 2ஆவது இடத்திலும், இந்தியா 205 பேருடன் 3ஆவது இடத்திலும் உள்ளன. 205 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.80.41 லட்சம் கோடி ஆகும்.

News April 2, 2025

லாலு ஹாஸ்பிடலில் அனுமதி

image

பிஹார் முன்னாள் CM லாலு பிரசாத் (76) ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி செல்வதற்காக பாட்னா விமான நிலையத்திற்கு அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடல்நிலை பாதிக்கப்படவே, அவர் உடனடியாக தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. விரைவில் டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.

News April 2, 2025

இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

image

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.

error: Content is protected !!