News March 27, 2025

ராசி பலன்கள் (27.03.2025)

image

➤மேஷம் – தாமதம் ➤ரிஷபம் – கீர்த்தி ➤மிதுனம் – ஆதரவு ➤கடகம் – இன்பம் ➤சிம்மம் – வெற்றி ➤கன்னி – துணிவு ➤துலாம் – நன்மை ➤விருச்சிகம் – மேன்மை ➤தனுசு – தெளிவு ➤மகரம் – ஜெயம் ➤கும்பம் – கவலை ➤மீனம் – வரவு.

Similar News

News January 7, 2026

ஆட்சியில் பங்கு என்பதில் உறுதியாக உள்ளோம்: அழகிரி

image

ஒவ்வொரு கட்சியும் வளர வேண்டும் என்பதால், அதிகாரத்தில் பங்கு கேட்பது நியாயமானது என காங்கிரஸின் KS அழகிரி தெரிவித்துள்ளார். வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டுகள் அதிக தொகுதி கேட்கின்றனர் என தெரிவித்த அவர், தங்களை பொறுத்தவரை திமுக தோழமை கட்சி என்பதால் பேரம் பேச தேவையில்லை என கூறியுள்ளார். அதேசமயம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

News January 7, 2026

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் திறந்த நிலையில், இன்று 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை திருவையாறு காவிரி கரையில் உள்ள தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழாவையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். படுகர் இன மக்களின் ஹெத்தை திருவிழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

திமுக கூட்டணியில் இருந்து காங்., வெளியேறாது: சீமான்

image

தவெகவிடம் கூட்டணிக்கு ரகசியமாக காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒரு தகவல் நீண்ட நாள்களாக பரவி வருகிறது. இந்நிலையில் தொகுதி பேரம் நடத்தவே காங்., இதுபோன்ற செய்தியை பரப்பி விடுவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து அவர்கள் வெளியே வரமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருப்பது கஷ்டமாக இருந்தால் காங்., தனித்து போட்டியிடலாமே எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

error: Content is protected !!