News April 24, 2025
ராசி பலன்கள் (24.04.2025)

➤மேஷம் – நட்பு ➤ரிஷபம் – நலம் ➤மிதுனம் – நன்மை ➤கடகம் – லாபம் ➤சிம்மம் – புகழ் ➤கன்னி – அன்பு ➤துலாம் – தடங்கல் ➤விருச்சிகம் – மகிழ்ச்சி ➤தனுசு – ஆதாயம் ➤மகரம் – சிக்கல் ➤கும்பம் – தாமதம் ➤மீனம் – அனுமதி.
Similar News
News April 24, 2025
1,500 பேர் கைது.. அதிரடியில் இறங்கிய காஷ்மீர் போலீஸ்!

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததன் எதிரொலியாக 1,500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் டேட்டாக்களில் இருப்பவர்கள், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டவர்கள், தொழிலாளர்கள் என பலரையும் கைது போலீஸ் விசாரித்து வருகிறது. மேலும், ஜம்மு – காஷ்மீரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
News April 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 316 ▶குறள்: இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். ▶பொருள்: ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
News April 24, 2025
அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு எப்போது?

நடிகர் அஜித் குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அவரது பிறந்த நாளான மே 1-ல் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் மாபெரும் ஹிட் அடித்ததால், ஆதிக் ரவிசந்திரனே அவரது அடுத்த படத்தையும் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குட் பேட் அக்லி படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த காம்போ உங்களுக்கு பிடிக்குமா?