News February 23, 2025

ராசி பலன்கள் (23.02.2028)

image

மேஷம் – பொறுமை, ரிஷபம் – இன்பம், மிதுனம் – அமைதி, கடகம் – போட்டி, சிம்மம் – ஆதரவு, கன்னி – உற்சாகம், துலாம் – நட்பு, விருச்சிகம் – பெருமை, தனுசு – ஆக்கம், மகரம் – புகழ், கும்பம் – அனுகூலம், மீனம் – பக்தி.

Similar News

News February 23, 2025

நீங்க நல்லவரா கெட்டவரா?

image

‘தக் லைஃப்’ படத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் நல்லவரா கெட்டவரா? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் கலகலப்பாக பதிலளித்துள்ளார். தான் திரும்ப மணிரத்னத்தை சந்திக்க வேண்டாமா எனவும், கஷ்டப்பட்டு எடிட்டிங் செய்து கொண்டிருக்கும் போது, எடிட்டே இல்லாமல் கதையை சொல்லிவிட்டீர்களே என கேட்டால் என்ன பதில் சொல்வது எனவும் கமல் கேட்டுள்ளார். நல்லதும், கெட்டதும் சேர்ந்ததுதான் அந்த கேரக்டர் என்றும் தெரிவித்துள்ளார்.

News February 23, 2025

PM Kisan: வங்கிக் கணக்கில் நாளை ரூ.2000

image

மத்திய அரசின் PM-KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2000 உதவித்தொகை நாளை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. 19ஆவது தவணையான இந்த உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர். முன்னதாக, இந்த உதவித்தொகையை வழக்கமாகப் பெறும் விவசாயிகள், தங்களது வங்கிக் கணக்கில் E-KYCயை செய்து முடிக்கவும். இல்லையெனில் கணக்கில் பணம் வராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

News February 23, 2025

கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கில் மார்ச் 5இல் தீர்ப்பு

image

சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரிய கார்த்தி சிதம்பரம் மனு மீது மார்ச் 5ஆம் தேதி டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சீனர்களுக்கு விசா வாங்கி கொடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. 2022இல் வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில், தீர்ப்பை மார்ச் 5ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார்.

error: Content is protected !!