News March 18, 2025
ராசி பலன்கள் (18.03.2025)

➤மேஷம் – செலவு➤ரிஷபம் – ஆதரவு ➤மிதுனம் – ஈகை ➤கடகம் – பெருமை ➤ சிம்மம் – பரிசு ➤கன்னி – உயர்வு ➤துலாம் – ஆர்வம் ➤விருச்சிகம் – கவனம் ➤தனுசு – அமைதி ➤மகரம் – வரவு ➤கும்பம் – நிறைவு ➤மீனம் – நஷ்டம்.
Similar News
News March 18, 2025
அண்ணாமலைக்கு தவெக பதிலடி

லண்டன் ஸ்கூல் மாணவர் அண்ணாமலை அரசியலை சரியாக படிக்காமல் பாதியில் வந்துவிட்டு, BJP- DMK கள்ளக்கூட்டணி வெளிவரத் துவங்கியதும் விழி பிதுங்கி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதாக தவெக பதிலடி கொடுத்துள்ளது. மாநிலத் தலைவராக இல்லாவிட்டால், உங்களை மக்கள் கடுகளவும் மதிக்க மாட்டார்கள், கண்டுகொள்ளவும் மாட்டார்கள் . எத்தனை காலம் இது போல் பேசியும், சாட்டையால் அடித்தும் ஏமாற்றுவீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
News March 18, 2025
வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர தடை!

நாக்பூரில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்கள் தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. முகமூடி அணிந்து வந்தவர்கள்தான் கலவரத்தில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
News March 18, 2025
BREAKING: அதிகாலையில் மீனவர்கள் கைது

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், அதிகாலையில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி விசைப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டனர். தொடரும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.