News February 18, 2025
ராசி பலன்கள் (18.02.2025)

மேஷம் – மகிழ்ச்சி, ரிஷபம் – வெற்றி, மிதுனம் – உயர்வு, கடகம் – நஷ்டம், சிம்மம் – ஆதரவு, கன்னி – அன்பு, துலாம் – ஊக்கம், விருச்சிகம் – நலம், தனுசு – பக்தி, மகரம் – ஆக்கம், கும்பம் – முயற்சி, மீனம் – சிந்தனை.
Similar News
News January 5, 2026
உத்தரகோசமங்கை கோவிலில் விபூதி வழங்க போலீஸ் தடை

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் சந்தனம் படி களையப்பட்ட அபூர்வ பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்வதற்காக, பல ஆயிரம் பக்தர்கள் நீண்ட வரிசையில், பல சிரமங்களையும் பொருட்படுத்தாமல் நின்று தரிசனம் செய்தனர். இந்நிலையில், எந்த ஆண்டும் இல்லாமல் புதிய நடைமுறையாக, நேற்று காலை முதல் புதிய சந்தனம் காப்பிடப்பட்ட மரகத நடராஜரை தரிசனம் செய்த பக்தர்களுக்கு, விபூதி பிரசாதம் வழங்க போலீசார் தடை விதித்தனர்.
News January 5, 2026
அசாமில் அதிகாலையில் நிலநடுக்கம்!

அசாமின் மத்தியப் பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றின் தென்கரையில் உள்ள மோரிகான் மாவட்டத்தில் 50 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம்(NCS) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதனால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ, சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ எந்த தகவலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 5, 2026
கடன், தடை, தோல்வியை விரட்டும் எள் தீபம்!

சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது கடன், தோல்வி, வாழ்வில் தடை ஆகியவற்றை நீக்க உதவும் என கூறுகின்றனர். எள்ளில் இருந்து பெறப்பட்ட நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவதே மிகுந்த மனமகிழ்ச்சியை தரும். காலையில் குளித்துவிட்டு இந்த மந்திரத்தை 9 (அ) 108 முறை சொல்வது விசேஷமானது ‘ஓம் சனைச்சராய வித்மஹே சூரிய புத்ராய தீமஹி தன்னோ மந்தப் ப்ரசோதயாத்’. எள்ளை நேரடியாக நெருப்பில் இடுவதை தவிர்க்கலாம். SHARE IT.


