News April 16, 2025
ராசி பலன்கள் (16.04.2025)

➤மேஷம் – சாந்தம் ➤ரிஷபம் – சிரமம் ➤மிதுனம் – களிப்பு ➤கடகம் – உயர்வு ➤சிம்மம் – பகை ➤கன்னி – வரவு ➤துலாம் – ஆர்வம் ➤விருச்சிகம் – பிரீதி ➤தனுசு – கவனம் ➤மகரம் – உழைப்பு ➤கும்பம் – யோகம் ➤மீனம் – பணிவு.
Similar News
News April 16, 2025
காலை 7 மணி வரை மழை

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ராமநாதபுரம், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இருப்பினும், காலை 10 மணிக்கு மேல் வெயிலும் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
News April 16, 2025
வரலாற்றில் இன்றைய தினம்

> அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது (1862)
> ஜாலியன் வாலா பாக் படுகொலையை கண்டித்து காந்தி ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார் (1919)
> கியூபாவை ஒரு பொதுவுடைமை நாடு என்று பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார் (1961)
> முதலாவது உலக தமிழ் மாநாடு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது (1966)
News April 16, 2025
வான்கடே மைதானத்தில் ஜொலிக்கும் ரோகித் பெயர்

ரோகித் சர்மாவை கவுரவிக்க மும்பை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. ஆம்! வான்கடே மைதானத்தில் ஒரு கேலரி-க்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் பெயரை வைக்க, மும்பை கிரிக்கெட் சங்க ஆண்டு பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் முன்னாள் BCCI தலைவர் சரத் பவார் மற்றும் பேட்டிங் ஜாம்பவான் அஜித் வடேகர் ஆகியோரின் நினைவாக மேலும் இரண்டு கேலரிகளுக்கு பெயரிடப்படும் என்றும் MCA உறுதிப்படுத்தியுள்ளது.