News September 9, 2025
ராசி பலன்கள் (09.09.2025)

➤ மேஷம் – ஏமாற்றம் ➤ ரிஷபம் – வெற்றி ➤ மிதுனம் – கவலை ➤ கடகம் – லாபம் ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – தடங்கல் ➤ துலாம் – மகிழ்ச்சி ➤ விருச்சிகம் – தாமதம் ➤ தனுசு – சுகம் ➤ மகரம் – வரவு ➤ கும்பம் – சிக்கல் ➤ மீனம் – அசதி.
Similar News
News September 9, 2025
பதவியை இழந்த பிரான்ஸ் பிரதமர்

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு தலைமையிலான அமைச்சரவை வாக்கெடுப்பு மூலம் கவிழ்க்கப்பட்டது. நாட்டின் கடன் சுமையால் பாய்ருவின் மைனாரிட்டி அரசு பட்ஜெட்டில் 44 பில்லியன் யூரோவை குறைக்க முடிவெடுத்தது. இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த நிலையில் பாய்ரு தனது பதவியை இழந்துள்ளார். இவருடன் சேர்த்து அதிபர் மேக்ரான் ஆட்சியில் 4 முறை பிரதமர்கள் ராஜிமானா செய்துள்ளனர்.
News September 9, 2025
டிராகனை பாராட்டிய அல்லு அர்ஜுன்

டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவை அல்லு அர்ஜுன் பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அஷ்வத், நீங்கள் காட்டிய அன்பிற்கும், தெரிவித்த பாராட்டுக்களுக்கும் நன்றி என கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் உடனிருந்துள்ளார். இதையடுத்து, இவர்களின் கூட்டணியில் படம் உருவாக வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
News September 9, 2025
செப்டம்பர் 9: வரலாற்றில் இன்று

*1799 – பாஞ்சாலக்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது. *1850 – கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது. *2002 – பீகாரில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 130 பேருக்கு மேல் உயிரிழந்தனர். *1967 – பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பிறந்த நாள்.*1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது. *2011 – நடிகை காந்திமதி மறைந்த நாள்.