News March 7, 2025
ராசி பலன்கள் (07 – 03 – 2025)

➤மேஷம் – நன்மை ➤ரிஷபம் – செலவு ➤மிதுனம் – லாபம் ➤கடகம் – போட்டி ➤ சிம்மம் – விவேகம் ➤கன்னி – தடங்கல் ➤துலாம் – அமைதி ➤விருச்சிகம் – சாந்தம் ➤தனுசு – அன்பு ➤மகரம் – மகிழ்ச்சி ➤கும்பம் – வெற்றி ➤மீனம் – இன்பம்.
Similar News
News March 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 199 ▶குறள்: பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். ▶பொருள்: அரும்பயன்களை ஆராய்ந்து மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.
News March 7, 2025
போலீஸ் கஸ்டடியில் நடிகை

தங்கம் கடத்திய கன்னட நடிகை ரன்யா ராவ் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவரது ஜாமின் மனு மீதான விசாரணை, பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. துபாயில் இருந்து ₹12 கோடி மதிப்பிலான 14.8 கி.கி தங்கம் கடத்தி வந்த போது, அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த ஆண்டு மட்டும் அவர் 27 முறை துபாய் சென்று தங்கம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
News March 7, 2025
ஷமி பாவம் செய்துவிட்டார்: முஸ்லிம் மதகுரு

புனித ரமலான் மாதத்தில் நோன்பை கடைபிடிக்காமல் ஷமி பாவம் செய்துவிட்டதாக முஸ்லிம் மதகுரு மௌலானா சஹாபுதீன் ரஷ்வி குற்றஞ்சாட்டியுள்ளார். IND vs AUS போட்டியின் போது ஷமி கூல்டிரிங் குடித்தது சர்ச்சையான நிலையில், அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், பயணத்தில் இருக்கும் போது நோன்பை கடைபிடிப்பதில் குரானில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பல முஸ்லிம் தலைவர்கள் ஷமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.