News April 5, 2025
ராசி பலன்கள் (05.04.2025)

➤மேஷம் – அமைதி ➤ரிஷபம் – ஜெயம் ➤மிதுனம் – சாந்தம் ➤கடகம் – போட்டி ➤சிம்மம் – கீர்த்தி ➤கன்னி – யோகம் ➤துலாம் – களிப்பு ➤விருச்சிகம் – ஆக்கம் ➤தனுசு – நட்பு ➤மகரம் – தாமதம் ➤கும்பம் – தோல்வி ➤மீனம் – கவனம்.
Similar News
News April 12, 2025
நாசாவின் ₹25 கோடி பரிசு: வெல்லப் போவது யார்?

அப்பல்லோ திட்டத்துக்காக 1969–72 வரை விண்வெளி வீரர்களை நாசா நிலவுக்கு அனுப்பி வைத்தது. மீண்டும் பூமிக்கு திரும்புவதற்குள் 96 பைகளில் மனிதக் கழிவுகள் சேர்ந்தன. விண்வெளி ஓடத்தில் இடப்பற்றாக்குறையை தவிர்க்க, அவை அங்கேயே வீசப்பட்டன. தற்போது நிலவில் நிரந்தர ஆய்வு மேற்கொள்ளவுள்ள நாசா மனிதக் கழிவுகளை ஆற்றலாக மாற்றும் சிறந்த யோசனைக்கு ₹25 கோடி பரிசு அறிவித்தது. விரைவில் வெற்றியாளர் தேர்வாகவுள்ளார்.
News April 12, 2025
20 கோடியைத் தாண்டிய ஜியோ ஹாட்ஸ்டார் பயனர்கள்

ஜியோ ஹாட்ஸ்டார் பயனர்களின் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டியுள்ளது. ஜியோவும், ஹாட்ஸ்டாரும் 2 மாதங்களுக்கு முன்பு இணைந்தன. இதையடுத்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் அது செயல்படுகிறது. ஐபிஎல் போட்டிகளையும் ஒளிபரப்புகிறது. இதனால் குறுகிய காலத்தில் 20 கோடியை கடந்த ஜியோ ஹாட்ஸ்டார், உலகில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைமுக்கு பிறகு 3வது பெரிய ஓடிடியாகியுள்ளது. நீங்க என்ன ஓடிடி பார்க்கறீங்க? கமெண்ட்.
News April 12, 2025
ரயில்வே 9,700 காலியிடங்கள்: 10th, ITI போதும்

ரயில்வேயில் துணை ஓட்டுநராக (Assistant Loco Pilot) பணியாற்ற விரும்புகிறீர்களா? இந்த பணிக்கு 9,700 காலி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலையில் சேர SSLC தேர்ச்சி பெற்று, ITI முடித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங்கில் Diploma, பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆரம்ப சம்பளம்: ரூ.19,900. வயது வரம்பு 30. மே.12க்குள் <